1069 நீசொல்லணும்
எதுமாறிப் பயனென்ன
என்னுள்ளம் மாறாமல்
எவர்கூறிப் பயனென்ன
நீவந்து பேசாமல்
உள்ளான மாற்றம்
உன்னாலே வரணும்
உன்னருள் அதற்கு
நீயுமேத் தரணும்
வயதாக வயதாக
உடல் மாறிப்போகும்
மனதும் அதற்கேற்ப
வளைந்து கொடுக்கும்
என்னதான் பிடிவாதம்
மனதுமே பிடித்தாலும்
ஏற்றிட உடல்மட்டும்
எப்போதும் மறுக்கும்
இயற்கையின் இந்த
மாற்றாத்தை உணர்ந்து
உடலோடு மனதும்
ஒத்துமே போகணும்
புரியாத பிறர்வந்து
சொல்லுவார் பலவும்
புரிந்த நமக்குத்தான்
புரியும் வலியும்
ஆகவே பிறர்வந்து
பேசிடும் முன்னேமே
ஐயனே நீவந்து
என்னிலைப் புரிந்து
எனக்கு ஏற்றது
எதுவென உணர்ந்து
எடுத்துச் சொல்லியே
வழியும் காட்டணும்
அதனாலே மாறாத
உன்சித்தம் அறிந்து
அடியனும் எஞ்சிய
வாழ்வை நடத்தணும்
மத்திகிரி, 19-2-2019, இரவு, 11.10