Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 994

$
0
0

994 Joyous bliss

No need to wander in searching god
No need to take abode in forest or hills
It is enough if we close our eyes to contemplate
He will appear before our inner eyes

Whether one is a fully learned scholar
Or if one hesitates that he is an ignorant person
Not thinking about our qualification
He will come to save us by giving himself for us

But we need to be qualified for that
We need humility to know it
When we realize the poverty of our heart
We can understand the greatness of his grace

We should understand that
In order to know god
With the help of intellect reading Veda deeply
And do the research, none has understood him

Understanding the fragile nature of this body
Which carries the life which might depart within a fraction of a second?
We should bow before him and beg him
Who has the ability to make or to annihilate (us?)

We should go before him in empty
We should stand before him in silence
Till he shows his compassion
Our heart should be filled with patience

The one who gives grace knowing our condition
When he comes and over lord us silently
When we experience that blessed status
A blessed blissfulness will overcome us

Mathigiri, 20-10-2018, 11.30 p.m.

All that one needs is humility, patience to be saved and also to experience the bliss which god will give us.

994 ஆனந்த அனுபூதி

கடவுளைத் தேடி அலைந்திட வேண்டாம்
காடு- மலைகளில் ஒதுங்கவும் வேண்டாம்
கண்மூடி அமர்ந்து எண்ணினால் போதும்
மனக்கண்முன் தோன்றி காட்சியும் தருவான்

முற்றாகக் கற்ற ஞானியே ஆயினும்
மூடன்நான் என்றும் தயங்கியே போதும்
நம்தகுதி தன்னை எண்ணியே பாராமல்
தன்னையே தந்து உய்விக்க வருவான்

ஆயினும் அதற்குமோர் தகுதியும் வேண்டும்
அதையும் அறிந்திடும் தாழ்மையும் வேண்டும்
மனதின் ஏழ்மையை உணர்ந்திடும் போது
அவனது அருளின் மேன்மை புரியும்

அவனை அறிந்திட ஆர்வமும் கொண்டு
அதற்கென மறையினை ஆழமாய்ப் படித்து
அறிவின் துணையுடன் ஆராய்ந்து பார்த்து
அறிந்தவர் இல்லை என்பதைப் புரியணும்

நொடியினில் பிரியும் உயிரினைத் தாங்கும்
உடலின் உண்மை நிலையினை உணர்ந்து
ஆக்கவும் அழிக்கவும் வல்ல அவன்முன்
அடிபணிந்தே இறைஞ்சிட வேண்டும்

வெறுமையாய் அவன்முன் சென்றிட வேண்டும்
வாய்மூடி மவுனமாய் நின்றிட வேண்டும்
இரங்கியே அவனும் அருளிடும் வரையிலும்
இதயமும் பொறுமையால் நிறைந்திட வேண்டும்

அருளிடும் அவனும் நம்நிலை உணர்ந்து
அமைதியாய் மனதினை ஆட்கொள்ளும் போது
அந்தப் பரவச நிலையினை அறிந்திட
ஆனந்த அனுபூதி ஆட்கொண்டு உய்க்கும்

மத்திகிரி, 20-10-2018, இரவு 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles