995 Heart will be filled
Remaining in silence
Thinking about the grace
When I bow at your feet
Your grace will increase
Forgetting the world
Coming to your feet
When I think about your love
Tears will flow
My tongue will
Sing your praises
When I think
All the blessings from you
I will understand
Your mercy
When I thinking
The reason for you to save me
When I think about
My life
My tongue will get twisted
Out of shyness
When I think about
All the turning points in life
I can realize your hands
Behind all of them
Though I get stumbled
And fell back
I can realize your compassion
Which upholds me?
When I cry
Thinking about my shortcomings
As you forgive me
My troubles will be gone
When I finally
Reached the end of my life
The remaining life
Belongs your responsibility
When I take
Refuge at your feet
Your peace will
Dwell in my heart
Mathigiri, 21-10-2018, 11.30 p.m.
Another meditation and thanks giving for what god has done in my life
995 நெஞ்சம் நிறையும்
அமைதியாய் இருந்து
அருளினை நினைந்து
திருவடி பணிய
கிருபையும் பெருகும்
உலகினை மறந்து
உன்னடி வந்து
அன்பினை நினைக்க
கண்களும் நனையும்
நீசெய்யும் நன்மைகள்
நினைந்திடும் போது
நன்றியால் நிறைந்து
நாவுமே துதிக்கும்
மீட்டதின் காரணம்
எண்ணிடும் போது
நீகொண்ட இரக்கத்தின்
தன்மையும் புரியும்
நான்கொண்ட வாழ்வின்
தன்மையை எண்ணிட
நாணத்தால் குறுகி
நாவுமே குழறும்
வாழ்வில் வந்த
திருப்பங்கள் எண்ணிட
உன்கரம் அதன்பின்
இருந்ததது விளங்கும்
பலமுறை இடறி
விழுந்திட்ட போதும்
பரிவுடன் தாங்கிய
பாசமும் புரியும்
குறைகளை எண்ணி
கதறிடும் போது
கனிவுடன் மன்னிக்க
கலக்கமும் நீங்கும்
இறுதியில் வாழ்வின்
எல்லைக்கு வந்தபின்
எஞ்சிய வாழ்வும்
உன் பொறுப்பாகும்
அதனை உணர்ந்து
சரணம் அடைய
நீதரும் அமைதி
நெஞ்சினில் நிறையும்
மத்திகிரி, 21-10-2018, இரவு, 11.30