Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1081

$
0
0

1081 It is a sickness

How to say about
My inner grudges
What to say
Which one is it?
As it becomes a burden
Which I cannot understand
How to say to about it
And to whom shall I share?

There is none
Other than you to listen
Even if others listen
They cannot understand it
I don’t have language
To share about it
Therefore there is
None to understand it

There is nothing to say
Anything new
Though I have lamented (about it) many times
You were not listening to me
Though I know the
Reason for it
There is no change
Within me

Telling many complaints
About shortcomings which are not there
Carrying unnecessary burdens
In vain
When I come and
Lament unto you
Where is the means for you?
To unload that burden

I should change this heart
Which laments (unnecessarily?)
I should realize that
It is not good (for me)
First I should understand that
This is a sickness
You should give medicine
To this sickness

Mathigiri, 6-04-2019, 11.10

Though god can listen to complains and lamentations, he cannot unload the burden which I carry unnecessarily because of my imagination and remove those shortcomings in life which is not even there. This kind of lamentation about imagined burdens is nothing but a kind of sickness. I know that clearly and god alone can cure it.

1081 புலம்பல் நோய்

என்மனக் குமுறலை
எவ்விதம் சொல்ல
என்மனக் குமுறலை
எதுவெனச் சொல்ல
எனக்கே புரியாத
பாரமாய் அதுமாற
எவரிடம் சென்று
எப்படிச் சொல்ல

கேட்டிட நீயன்றி
வேறாரும் இல்லை
கேட்டாலும் பிறருக்கு
புரிந்திட வழியில்லை
சொல்லிட என்னிடம்
மொழியுமே இல்லை
ஆகவே புரிந்திட
வேறாரும் இல்லை

புதிதாகச் சொல்லிட
ஏதுமே இல்லை
பலமுறைப் புலம்பியும்
நீகேட்க வில்லை
ஏனென எனக்கு
நன்றாகத் தெரிந்தும்
என்னிடம் எவ்வித
மாற்றமும் இல்லை

இல்லாத குறைகளை
வீணாகக் கூறி
வேண்டாத பாரத்தை
வீணாகச் சுமந்து
உன்னிடம் வந்து
புலம்பிடும் போது
இறக்கிட உனக்க்கும்
வழியேதும் இல்லை

புலம்பிடும் மனதினை
மாற்றிட வேண்டும்
புலம்புதல் சரியில்லை
என்பதை உணரனும்
நோயிது என்பதை
முதலிலே அறியணும்
நோய்க்கு மருந்து
நீயுமே அருளணும்

மத்திகிரி, 6-04-2019, இரவு, 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles