122 Sweet old age
Old age is sweet indeed
Though we are crippled
And confined in a corner
Old age is sweet indeed
We need to get up in a hurry
And need not work with much haste
We need not run pillar to post
In everyday life
Getting up leisurely
Sitting taking much rest
Doing minimum work
We can life with satisfaction
Working to earn
Calculating gain and losses
Spending with much thrift
We need not become upset
Rejoicing when we get
Having patience when we don’t get
Accepting whatever comes
We can spend our life
Whatever uproar we make
However we make big scenes
Though we long much
There is none to uphold us
Understanding this truth
Realizing what is happening (around us)
We need not lament
When we are deceived
After much expectation
Understanding this well
Accepting this whole heartedly
If we live not murmuring
Old age is indeed sweet
Gurukulam, 2-6-15, 6.15 a.m.
As I become an old man who went through various phases of live, I can say with much confidence that among all the stages of life, old age alone is very sweet one. Though there are several challenges related to physical limitations, still compare the life of others who live a life with much activities rushing and pushing, we can sit back and relax watching all their activities with a smile. At least I am enjoying my old age. So for me old age is the golden period in life. Just relax and enjoy it.
122 இனிய முதுமை
முதுமையும் இனிமையே
முடங்கியே போனாலும்
மூலையில் கிடந்தாலும்
முதுமையும் இனிமையே
பரபரப்பாய் எழுந்திருந்து
படபடப்பாய் செயல்புரிந்து
அவசரமாய் ஓடியாடி
அன்றாடம் ஓடவேண்டாம்
பொறுமையாய் எழுந்திருந்து
ஓய்வாக அமர்ந்திருந்து
கொஞ்சமாக செயல்புரிந்து
நிறைவாக வாழ்ந்திடலாம்
காசுசேர்க்க வேலைசெய்து
கஷ்டநஷ்ட கணக்கும் பார்த்து
கொஞ்சநஞ்சம் செலவழித்து
கோபதாபம் கொள்ளவேண்டாம்
கிடைத்த போது மகிழ்வுகொண்டு
கிடைக்காவிட்டால் பொறுமைகொண்டு
வருவதை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கையை ஓட்டிடலாம்
ஆரவாரம் நாம் செய்தாலும்
அதிகம் அலட்டிக் கொண்டாலும்
ஏக்கம் கொண்டு தவித்தாலும்
தாங்குவோர் எவரும் இல்லை
இந்த உண்மை புரிந்து கொண்டு
நடப்பதை அறிந்து கொண்டு
எதிர்பார்த்து இனி ஏமாந்து
வீணாகப் புலம்பவேண்டாம்
இதை நன்கு உணர்ந்துகொண்டு
இதனையும் நாம் ஏற்றுகொண்டு
முணுமுணுக்காது வாழ்ந்தாலே
முதுமையாகும் இனிமைதானே
குருகுலம், 2-6-15, காலை 6.15