Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1082

$
0
0

1082 Inner communication

Though I become tired
Both in body and mind
My spirit will have
Communication with you

Though I become tired
By struggling with the world
I can overcome it
With your help

Whatever kind of weakness
Might come in my life
I should live with the
Strength given by you

Though I have
Many shortcomings
I should be emancipated
By your completeness

However everyday
Life moves
I should see your grace
In it

You who over lorded me
Leads me in it
Oh my Lord I should
Follow you

In this beautiful life
Which you bestowed
Filled with bhakti
Taking your feet on my head

Praising you calling
Oh my Father Oh my mother
Singing song
Overcome by joy

Thanking for the life
Which you gave to me
Both in thought and heart
Having fellowship with you

Blessing you to live
Forever and ever
I should celebrate
You everyday

Mathigiri, 8-4-2019, 10.30, p.m.

Since past one week there is no proper sleep. Almost I got up around 2.00 regularly every night, though I go to bed around 11.50 pm. There is no proper rest in the day time also. So I become very tired physically and my mind refuse to concentrate on anything. Night after reading Muktiveda, as I unable to read my books, I sat quietly not even meditating. After spending few minutes, as the inspiration came I wrote this song.

1082 உள்ளான உறவு

உடலாலும் மனதாலும்
சோர்ந்துமே போனாலும்
உள்ளாக என்னாவி
உன்னோடு உரையாடும்

உலகோடு போராடி
நானோய்ந்து போனாலும்
உன்னாலே நானதை
வென்றிடக் கூடும்

எத்தகைய பலவீனம்
என்வாழ்வில் வந்தாலும்
நீதரும் பெலத்தாலே
நான் வாழவேண்டும்

எவ்வளவு குறைகள்
என்னிடம் இருந்தாலும்
நீதரும் நிறைவாலே
நானுய்ய வேண்டும்

அனுதின வாழ்வுமே
எவ்விதம் நகர்ந்தாலும்
அதனுள்ளே நானுன்
அருள்காண வேண்டும்

ஆட்கொண்ட நீயும்
அதனுள்ளே வழிகாட்ட
ஐயனே உன்னைநான்
பின்தொடர வேண்டும்

நித்தமும் நீதரும்
உத்தம வாழ்விலே
பக்தியில் நிறைந்துமே
பதமலர்ச் சூடியே

அமையே அப்பனே
என்றுமே போற்றியே
ஆனந்தம் மேலிட
பண்களால் பாடியே

நீதந்த வாழ்வுக்கு
நன்றியும் சொல்லியே
நினைவாலும் மனதாலும்
உன்னோடு உறவாடி

நீடூடிவாழ்க வென
என்றுமே வாழ்த்தியே
நாள்தோறும் நானுன்னைக்
கொண்டாட வேண்டும்

மத்திகிரி, 8-4-2019, இரவு, 10.30,


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles