Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1093

$
0
0

1093 Need no answer

Why you took
Pity on this dog
Which dwells in the ditch?
Only tell this to me

When wise and good
People are there
Why you came
Seeking this evil one?

Why you have done this
Contrary to the nature
What you have gained
By redeeming me

As god will
Dwell only in the
Heart of the
Pure one is true

Why you took this
Blame by
Seeking me and
Dwelling in my heart?

When I was
Searching the means
To run
Away from me

Why you called me
To come unto you
By stretching
Both your hands

Why you kept me
In the middle of the house
By washing the ditch
And removing the bad smell

Why you served
A feast before me
While I lick only
What is left on the leaf (plate?)

Though I lived
As a bhakta all these years
Still I cannot
Understand this

As this is your
Nature
There is no need
For any more answer (to these questions)

Mathigiri, 9-5-2019, 11. 45 p.m.

பாவியை மீட்பதே குணமானபின்னே, ஏன் மீட்டாய் என்றே இறைவனைக் கேட்க வேண்டாம்
As saving the sinner becomes the nature of god I need not ask question: why he redeemed me, the worst sinner on earth. This is what Thirumular says in Tirumandiram: God stood next to the one who does errors.
இறைவன் பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே

1093 பதில் தேவையில்லை

கும்பியில் கிடந்த
நாயின் மீது
ஏன்கொண்டாய் இரக்கம்
அதைமட்டும் கூறு

நல்லவர் ஞானியர்
வாழ்ந்திடும் போது
தீயனைத் தேடி
ஏன்வந்தாய்க் கூறு

இயற்கைக்குப் புறம்பாய்
ஏனிதைச் செய்தாய்
என்னை மீட்பத்தில்
பயனென்னக் கண்டாய்

தூயாவர் நெச்சில்
மட்டுமே தெய்வம்
தங்கிடும் என்பது
உண்மை என்றால்

தீயவன் நெஞ்சை
தேடியே வந்து
குடிகொண்டு ஏன்
வீண்பழி கொண்டாய்

என்னை விட்டே
நானும் ஓட
வழியைத் தேடி
திரிந்த போது

உன்னிடம் ஓடி
வந்திட வென்று
இருகரம் நீட்டி
ஏன்என்னை அழைத்தாய்

கும்பியைக் கழுவி
நாற்றத்தைப் போக்கி
வீட்டின் நடுவே
ஏன்நீ வைத்தாய்

இலையில் மீந்த
எச்சிலை நக்கும்
என்முன் ஏன்
விருந்தும் படைத்தாய்

இத்தனை காலம்
பக்தனாய் வாழ்ந்தும்
இதுமட்டும் எனக்குப்
புரியவே இல்லை

இதுவே உனது
இயல்பு என்பதால்
இனியொரு பதிலும்
தேவையே இல்லை

மத்திகிரி, 9-5-2019, இரவு, 11. 45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles