1092 Simple means
I alone know the
Life that I lived
You alone came
Knowing my need
Knowing my heart
Which I cannot even understand
You redeemed me
Knowing about me
When I think
About it often
Even my buddhi
Is wondering about it
But my heart
Understood that
A miracle
Has happened
When I asked
Why you have done it
You gave
Proper answer
Accepting it
I gave thanks to you
I sang your praises
Till I got scar on my tongue
There is no
Means for
Anyone to
Understand our relationship
However I
Try to communicate
Through any writing
Nothing able to do that
Then you told
About a way
And you asked me
To do it
You gave a
Simple way
Which any
Words cannot communicate
Accepting it
I did accordingly
For that
I gave my life
Receiving the
Nobleness status
To live as your bhakta
I thanked you
Mathigiri, 9-5-2019, 11.15 p.m.
What cannot communicate through letters a bhakta can communicate through her bhakti. As god gave that opportunity for me to be his bhakta, thanking him I wrote this song.
1092 எளிய வழி
நான்மட்டும் அறிவேன்
நான்வாழ்ந்த வாழ்வை
நீமட்டும் வந்தாய்
உணர்ந்தென் தேவை
எனக்குமே புரியாத
என்மனம் அறிந்து
என்னைநீ மீட்டாய்
என்னைநீ புரிந்து
அடிக்கடி அதையே
நினைத்திடும் போது
அறிவும் கூட
வியந்தே போகுது
ஆயினும் மனதுக்கு
நன்றாய்ப் புரியுது
அதிசயம் ஒன்று
நடந்தது என்று
ஏனிதைச் செய்தாய்
என்றுமே கேட்டேன்
ஏற்ற பதிலை
நீயுமேத் தந்தாய்
நானதை ஏற்று
நன்றியும் சொன்னேன்
நாத் தழும்பேற
உன்னைப் புகழ்ந்தேன்
இருவரும் கொண்ட
இந்த உறவை
எவரும் புரிந்திட
வழியுமே இல்லை
எவ்விதம் எழுதி
காட்டிய போதும்
ஏதுமே அதனை
விளக்கிட வில்லை
அதன்பின் நீயொரு
வழியைச் சொன்னாய்
அதன்படி செய்ய
என்னைப் பணித்தாய்
எழுத்தினால் கூறி
புரியா ஒன்றை
எளிதில் புரிய
வழியைத் தந்தாய்
அதனை ஏற்று
அதன்படி செய்தேன்
அதற்கென எனது
வாழ்வைத் தந்தேன்
பக்தனாய் வாழும்
பேற்றினைப் பெற்று
நித்தமும் உனக்கு
நன்றியும் சொன்னேன்
மத்திகிரி, 9-5-2019, 11.15, இரவு,