284 Untitled story
As my life remains
An unwritten story
What kind of title
Can I give it?
As I remain
Meaningless poem
How can I compose?
Music to it!
As my speech
Remains unclear
How can I write?
Any commentary to it!
When I walk
Where there is no path
How is it possible
For me to complete my journey!
As there are
Similar questions here
Where can I go for the answer?
Which is not even there?
Finally when the
Words are confused
Not knowing
How to complete this poem
I alone live
Enjoying everyday life
Silently laughing
Within me
Mathigiri, 19-1-17. 11.35 p.m.
As I went for my night walk, the first line automatically came in my mind. First I wanted to ignore even that inspiration. But as further words began to flow in my mind, I wrote this song within 3 minutes. But as I wanted to end this song with some humour, I bit reflected how to complete it with such spirit. And when the thoughts again came, I wrote the final stanza and began to laugh within me for long time and retired to bed by 12.30 with still smile on my lips.
284 தலைப்பில்லா கதை
எழுதாத கதையாக
என்வாழ்வும் இருக்க
இதற்கென்ன தலைப்பொன்று
நானிங்கு கொடுக்க
புரியாத பாடலாய்
நானுமே இருக்க
இதற்கென்ன இசையொன்று
நானுமே அமைக்க
தெளிவில்லா மொழியாக
என்பேச்சும் இருக்க
இதற்கென்ன உரைஒன்று
நானிங்கு வடிக்க
வழியில்லா பாதையில்
நானிங்கு நடக்க
இறுதியில் பயணத்தை
எவ்விதம் முடிக்க
இதுபோன்ற கேள்விகள்
பலவிங்கு இருக்க
இல்லாத பதிலுக்கு
நானெங்கு போக
இறுதியில் இப்பாட்டை
எவ்விதம் முடிக்க
என்பது தெரியாமல்
எழுத்துக்கள் தவிக்க
நான்மட்டும் என்னுள்ளே
மெளனமாய் நகைத்து
நாளும் வாழுறேன்
வாழ்க்கையை ரசித்து
மத்திகிரி, 19-1-17., இரவு 11.35