285 A shortcoming with short coming
Thousands of fault one would find
thinking that they are without fault
unable to see good in anything
they search only bad things just for evil sake
God kept flower only amidst thorn
and kept water inside the rock
and in those whom we consider as fools
He kept so many beautiful thoughts like pearls
we should not mock anyone
thinking that they are ignorant
but they will be nobler than
those whom we consider as great
In order to see the good in others
the nature of fault finding should go
once we began to see only good in them
this fault finding nature will go away from us
There is none on this earth
who lived without any shortcomings
once we began to see all the defects as fault
then there is none as a perfect being
Mathigiri, 20-1-17, 2.10 pm.
The only way to get rid of fault finding nature with us is to see good in others.
285 குறையுள்ள குறை
குறைகள் ஆயிரம் கூறுவார் உண்டு
குற்றமே அற்றவர் என எண்ணிக்கொண்டு
நன்மையை ஒன்றிலும் காணவே தெரியாது
தேடித் திரிகிறார் தீமைக்கு என்று
முள்ளின் நடுவில்தான் பூவையும் வைத்தான்
கல்லின் இடையில்தான் நீரையும் தந்தான்
மூடர் என்றுநாம் கூறுவோர் வார்த்தையில்
முத்தான தத்துவம் பலவும் அளித்தான்
எளியவர் என்று எள்ளியே எவரையும்
ஏளனம் நாமும் செய்திட வேண்டாம்
உயர்ந்தவர் என்போர் வியந்திடும் வண்ணம்
எளியவர் அவரினும் மேன்மைய் இருப்பார்
பிறரிடம் உள்ள நிறைவைக் காண
குறையே காணும் குணமும் போகனும்
நன்மையை மட்டுமே காணத் தொடங்க
அக்குறை நம்மில் தானே விலகும்
குறைகள் என்று ஏதுமே இல்லாமல்
குவளயத்தில் வாழ்ந்தவர் எவருமே இல்லை
குறைகளைக் குறைகளாய் குறைகூற முயன்றால்
நிறை உள்ளவரென்று ஒருவரும் இல்லை
மத்திகிரி, 20-1-17, மதியம், 2.10