Quantcast
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 328

328 Are you a strange creature?

 

Don’t think deeply about anything

And don’t do much research

Just accept the things as they come

You learn to live as you came

 

Nothing is happening in this world

Separately for you

God too has never created

Anything especially for you

 

He never creates a

Separate world for you

He never put you

All alone in it

 

Just tell me

In what way you are different from others

Stop merely arguing

For everything in life

 

When others are living normally

What is the need for your special analysis?

What kind of joy you find

By asking questions which are not useful to anyone?

 

There is none to come forward

To give answer to your questions

Nobody is interested

To respond to your inquiries

 

Keeping both your mind and mouth shut

Try to live silently

If you refuse to listen to me

Leave me alone, I don’t have time for you

 

Mathigiri, 26-6-17, 6.15 pm.

 

As I went for my walk, as usual so many questions came in my mind about various things in life.  As I began to ponder them to find an answer, then I said in Tamil don’t think too much about so many things.  Nobody is going to listen to you or going to give answer to your questions. Keep your mouth shut and live the life just as it comes.  Then as inspiration came, I recorded this song in my mobile while walking.

 

328 தனிப்பிறவியா

 

அதிகமாய் எதையும் யோசிக்காதே

ஆழமாய் ஆராய்ந்து பார்க்காதே

வருவதை மட்டும் ஏற்றுக் கொள்ளு

வந்தபடி நீ வாழ்ந்து கொள்ளு

 

உனக்கென என்றும் உலகினிலே

ஒன்றும் தனியாய் நடப்பதில்லை

உன்னை மட்டும் தனிவிதமாய்

இறைவனும் இங்கே படைக்கவில்லை

 

உனக்கென ஒரு உலகத்தினை

தனியாய் அவனும் படைக்கவில்லை

உன்னைமட்டும் தன்னந்தனியாக

அதனுள் அவனும் வைக்கவில்லை

 

எந்தவிதத்தில் நீ தனித்திருக்காய்

என்பதை மட்டும் எனக்குச் சொல்லு

எதுக்கெடுத்தாலும் வாதம் செய்யும்

பழக்கத்தை மட்டும் நிறுத்திக்கொள்ளு

 

எல்லோரும் இயல்பாக வாழ்ந்திருக்க

உனக்கென்ன தனியாய் ஆராய்ச்சி

எவருக்கும் பயனில்லாக் கேள்விகளை

கேட்பதில் உனக்கென்ன தனிமகிழ்ச்சி

 

உனக்கு முன்வந்து பதில் தரவோ

ஒருவரும் இங்கு வரவில்லை

உனது கேள்விக்கு பதில் கூற

எவரும் சற்றும் விரும்பவில்லை

 

மனதையும் வாயையும் மூடிக்கொண்டு

மெளனமாய் நீயும் வாழ்த்து விடு

மாட்டேன் என்று நீ நின்றால்

வம்புக்கு வரவில்லை ஆளை விடு

 

மத்திகிரி, 26-6-17, மாலை, 6.15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles