332 A race without any goal
Days are running
Somehow time is going on its own way
Finally when we count the days
It is growing more and more
When we turn back
We can see from where we begin
When we look forward
It goes without having an end
Whatever might be the goal?
And however we run towards it
Once we reached it
We realize that it is still not there
We all run
To reach the goal which is not there?
Finally not anyone reaching it
We all continue to run
Who started it?
We don’t know for sure
Who will finally reach?
That we don’t know definitely
But there is no chance
For anyone to stop the race
As many are following us
There is no place for us to stop
Therefore I too run
To give room for others to come behind me
So that I will reach to catch
Those who already went ahead of me
Mathigiri, 5-7-2017, 10.30 pm.
We have to run in life as there is no space for us to stand still. At the same time we run towards a goal which does not exist. But the only goal is to reach those who vacated the place so that others can come and run behind us. There is no end to this marathon race.
332 இலக்கு இல்லா ஓட்டம்
ஓடித்தான் போகிறது இங்கு
ஒருவிதம் காலம் கழிகிறது
இறுதியில் நாட்களை எண்ணும்போது
இன்னும் இன்னும் வளர்கிறது
திரும்பிப் பார்க்கும் போதினிலே
தொடக்கம் கண்ணுக்குத் தெரிகிறது
முன்பக்கம் ஏறிட்டுப் பார்க்கையிலே
முடிவில்லாமல் அது வளர்கிறது
இலக்கு எதுவாய் இருந்தாலும்
இலக்கை நோக்கி நடந்தாலும்
இலக்கை அடைந்தபின்னாலே
அதுஅங்கே இல்லை புரிகிறது
இல்லா இலக்கை அடைவதற்கு
எல்லோரும்தான் ஓடுகிறோம்
இறுதியில் எவரும் அடையாமல்
என்னவோ ஓட்டத்தை தொடர்கிறோம்
தொடங்கி வைத்தவர் எவரென்று
தெளிவாய் நமக்குத் தெரியாது
இறுதியில் அடைபவர் எவரென்று
யாருக்கும் நிச்சயம் தெரியாது
ஆயினும் ஓட்டத்தை நிறுத்திடவோ
யாருக்கும் இங்கே வழியில்லை
பின்னால் பலர் வருவதனால்
நமக்கு நிற்க இடமில்லை
அதனால் நானும் ஓடுகிறேன்
அடுத்தவர் பின்னால் வருவதற்கு
முன்னால் ஒடிச் சென்றவரை
நானும் சென்று அடைவதற்கு
மத்திகிரி, 5-7-2017, இரவு 10.30