Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 331

$
0
0

331 Be humble

 

All that was done in a hurry came to an end

This evil heart now realized it

All the contentions that you had

Now came to an end quickly

 

What kind of arrogant heart you had

How much you talked vainly

Now unable to accomplish anything

You become silent within you

 

What happened now?

As you threw away people from your life

You never listened to anyone

Therefore everything was spoiled

 

Thinking that you know all

You have had so many arguments

Even if someone try to point out

You have behaved rudely even after that

 

Now you have a nose cut

As you fell down with the same speed in which you run

Now unable to see others

You try to cover it up

 

The best indeed is doing annadhana (giving food to others)

But greater than that is patience

When others try to give you freely

You receive it with much humility

 

Don’t talk vainly with much frustration

Don’t run rushing and pushing too much

Learn to live with humility

Add virtue with it more

 

Mathigiri, 4-7-2017, 6.30 pm.

 

Humility and patience are the highest virtues. But I never realize this, as I often get stumbled in this.  As I was reflecting upon this I wrote this song.

 

331 பணிவாக வாழு

 

பரபரப்பெல்லாம் ஒஞ்சுப்போச்சு

பாழான மனசுக்குப் புரிஞ்சுப்போச்சு

வீணாக நீபோட்ட ஆட்டமெல்லாம்

விரைவாக இங்கே முடிஞ்சுப்போச்சு

 

எத்தனை எகத்தாளம் மனதினிலே

என்னமாய் பேசினாய் வீணிலே

ஏதுமே சாதிக்க முடியாம

அடங்கினாய் மவுனமாய் மனதுக்குள்ளே

 

எடுத்து எரிஞ்சிப் பேசினியே

இப்போ நிலைமை என்னாச்சு

எவர் சொன்னாலும் கேட்கவில்லை

அதனால் காரியம் வீணாச்சு

 

எல்லாம் எனக்குத் தெரியுமென

எதற்கெடுத்தாலும் வாதம்செய்தாய்

எவரேனும் சற்று எடுத்துச் சொன்னால்

அதையும் மீறி வம்பு செய்தாய்

 

ஓடிய வேகத்தில் தடுக்கிவிழ

உடைந்தது மூக்கு இப்போது

ஏறிட்டுப் பார்க்க வெட்கப்பட்டு

மூடுறாய் அதையும் கைக்கொண்டு

 

தானத்தில் சிறந்தது அன்னதானம்

அதனினும் சிறந்தது நிதானம்

அதைப்பிறர் தானமாய்த் தரும்போது

அடக்கமாய் நீயும் வாங்கிக்கொள்ளு

 

படபடப்பாய் இனிப் பேசாதே

பரபரப்பாக இனியும் ஓடாதே

பணிவோடு வாழ பழகிக்கொள்ளு

பண்பையும் அதற்கு சேர்த்துக்கொள்ளு

 

மத்திகிரி, 4-7-2017, மாலை 6.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles