330 Don’t hesitate
“Once all those who were with me have gone
What kind of life is there for me anymore”?
Did you noticed the life of those
Who lament like this?
Did they give up even one thing in their life?
Did they say that they don’t want it anymore?
The life goes as usual for them
There is no option but to live like this.
If all those who came with us continue to be with us
The burden will increase slowly
Once they leave in time
Finally the burden will become light
When they come, don’t reject them
When they offer some help don’t refuse to accept it
Don’t forget to do your part also
When they leave, don’t stop them
You too will go in the same way as others have gone
Those who left behind will follow you
In the middle some will join you
But till the end no will come with you
Understanding this truth
Taking those who come with you
Not hesitating to bid good-bye to those who leave
You to live as long as you live on this earth
Mathigiri, 2-7-2017, 10.30 pm.
Another reality about life. This is true not only about ‘death’ as the final good-bye for those who lived with us, but even in relationship and friendship. Though we will miss them for some time, but life will go as usual for all.
330 தயங்காதே
எல்லோரும் இங்கே போனபின்னாலே
எனக்கென வாழ்க்கை இனிமேல் என்ன
என்றுமே சொல்பவர் நிலையும் என்ன
என்பதை நீயும் சென்று பார்த்தாயா
ஏதேனும் ஒன்றை குறைத்து விட்டாரா
இனிமேலே வேண்டாம் என்று சொன்னாரா
வழக்கம் போல வாழ்க்கை ஓடுது அவர்க்கு
வாழ்ந்துதான் ஆகணும் வழியில்லை பிறர்க்கு
கூடவே வந்தவர் கூடவே இருந்தால்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாரமும் பெருகும்
ஏற்ற காலத்தில் அவரவர் விலக
இறுதியில் பாரம் எளிதாய்ப் போகும்
வரும்போது வேண்டாம் என்று ஒதுக்காதே
தரும்போது உதவியை பெறவும் மறுக்காதே
உன்பங்கை நீயும் செய்ய மறக்காதே
விலகிடும் போது வீணிலே தடுக்காதே
எல்லோரும் போனவழி நீயுமே போவாய்
இருப்பவர் தொடர்ந்து பின்னாலே வருவார்
இடையிலே ஒருசிலர் கூடவே சேர்வார்
இறுதியில் எவருமே கூடவே வாரார்
இந்த உண்மையை உணர்ந்து கொண்டு
கூட வருவோரை சேர்த்துக் கொண்டு
போவோர்க்கு தயங்காமல் விடையும் கொடுத்து
பூமியில் வாழும்வரை நீயுமே வாழு
மத்திரிகி, 2-7-2017, இரவு 10.30