Quantcast
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 329

329 An advice to me

 

I cannot change my habit

The spoiled heart is not listening

I cannot forget the habit

There is no use taking pity on me

 

At the same time

I cannot wash my hands towards me

But I don’t have any more strength

To do more than this

 

There is no point in teaching

As no one refuses to listen

Though some have their own brain

They don’t know how to think independently

 

Don’t ask me

To whom I give this advice

I never proclaim this to the world

When I don’t have means to escape

 

I tell this only to me

I try to mend my way each day

But both my buddhi and heart are

Not ready to listen to me

 

There is a tug up war between buddhi and heart

They do it each day

I cannot bear with them anymore

I am unable to live with them each day

 

But this struggle has now

Become part of everyday life

Lamenting about it

Also become my habit

 

Once habit become the routine

There is no point of taking pity on me

As I learnt to struggle each day

I need not worry too much about it

 

Mathigiri, 28-6-2017, 11.10 pm.

 

The constant struggle between mind (buddhi) and heart is a great challenge for me.  I cannot give up one at the cost of the other. They both are part of me.  Yet the way they approach several issues in life is completely different. While my buddhi analyze and try to approach with reason, my heart goes as per the feeling and emotion. At the same time I understand that there is no buddhi and heart separately and both are nothing but the function of the brain—several times simultaneously. Yet I cannot escape from the dvand (repulsion and attraction,–reason and emotion).  As I thought about it, I wrote this song giving advice to my—buddhi or heart?  I don’t know.  Anyhow who is the ‘I’ which address this buddhi and heart?

 

329 எனக்கே உபதேசம்

 

பழக்கத்த மாத்திக்க முடியவில்லை

பாழான மனசும் கேட்கவில்லை

பழகிய தோஷம் மறக்கவில்லை

பாவப் பட்டும் பயனில்லை

 

என்னவோ செய்துகொள் எனச்சொல்லி

ஏனோ கைவிட மனமில்லை

இதற்கு மேலே செய்திடவோ

எனக்கும் மனதில் தெம்பில்லை

 

சொன்னால் கேட்கமாட்டேன் என்றால்

சொல்வதில் எவ்விதப் பயனுமில்லை

சிலருக்கு சொந்த மதியிருந்தும்

சுயமாய் சிந்திக்கத் தெரியவில்லை

 

யாருக்கு இந்த உபதேசம்

என்று என்னை கேட்காதீர்

ஊருக்குச் சொல்ல வரவில்லை

எனக்கேவழி இன்னும் பிறக்கவில்லை

 

நானே எனக்குச் சொல்லுகிறேன்

நாளும் திருத்திட முயலுகிறேன்

ஆயினும் பேச்சைக் கேட்பதற்கு

புத்தியும் மனதும் விரும்பவில்லை

 

புத்திக்கும் மனதுக்கும் போராட்டம்

ஆடுது நாளும் சதிராட்டம்

இவற்றின் தொல்லையும் தாங்கவில்லை

இவற்றுடன் வாழவும் முடியவில்லை

 

ஆயினும் இந்தப் போராட்டம்

அனுதின வாழ்வின் பகுதியாச்சு

அதையும் சொல்லிப் புலம்புவது

எனக்கும் கூட வழக்கமாச்சு

 

வழக்கமே பழக்கமாய் போனபின்னே

பாவப்பட்டுப் பயனில்லை

அன்றாடம் போராடப் பழகியதால்

அதிகம் அலட்டிக்கத் தேவையில்லை

 

மத்திகிரி, 28-6-2017, இரவு 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles