Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 340

$
0
0

340 Never ending negotiation

 

There is no place for vain talk

There is no answer to the unnecessary question

Those who cannot understand our acts

There is no use in sitting and talking with them

 

Even if we give explanations, they won’t understand

Even if we properly explain, they won’t accept it

They won’t tolerate if we began to argue

They won’t change their mind

 

Surely we can find a solution through talk

Provided if the one who comes to talk seeks it

In the name of talking if we merely argue

At the end how can we reach any negotiation?

 

Having a final solution already in the mind

And only to achieve it

If it is imposed upon others

The one who listens won’t accept it

 

Clearly sharing their reasons properly

And listening to others points as well

Both compromising to some extent

Should think which one could be correct

 

Without this there is no use in talking

Others cannot understand our questions

We don’t have answer to their questions too

Therefore there is solution in such negotiations

 

Mathigiri, 12-7-2017, 10.45 pm.

 

After writing the previous song (339), as I began to further reflect about this topic, as the inspiration continued, I wrote this song.

 

340  தீர்வற்ற பேச்சு

 

வீணான பேச்சுக்கு வேலையே இல்லை

வேண்டாத கேள்விக்கு பதிலும் இல்லை

செயலில் காட்டியும் புரியாதோர்க்கு

சொல்வதால் மட்டும் பயனுமே இல்லை

 

விளக்கங்கள் தந்தாலும் விளங்கிட மாட்டார்

விவரித்துச் சொன்னாலும் ஏற்கவும் மாட்டார்ர்

தர்க்கங்கள் செய்தாலோ பொறுக்கவும் மாட்டார்

தான்கொண்ட எண்ணத்தை மாற்றவும் மாட்டார்

 

பேசினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்

பேசவருபவர் தீர்வைத் தேடினால்

பேசுறேன் என்று வீண்வாதங்கள் செய்தால்

இறுதியில் தீர்வு எப்படி கிடைக்கும்

 

முன்னொரு தீர்வை மனதிலே கொண்டு

அதையே அடைய எண்ணம் கொண்டு

அடுத்தவர் மீது அதையும் திணித்தால்

கேட்பவர் அதனை ஏற்கவும் மாட்டார்

 

தன்பக்க நியாயத்தை சரியாய் வைத்து

அடுத்தவர் நியாயத்தை பொறுமையாய்க் கேட்டு

இருவரும் சற்றே இறங்கியும் வந்து

எதுசரி என்பதை எண்ணிட வேண்டும்

 

அதுவன்றி பேச்சிலே பயனே இல்லை

அவரவர் கேள்வியும் புரிவதும் இல்லை

அடுத்தவர் கேள்விக்கு பதிலும் இல்லை

அதனால் பேச்சினால் தீர்வும் இல்லை

 

மத்திகிரி, 12-7-2017, இரவு 10.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles