Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 399

$
0
0

399 Don’t accept defeat

 

Oh my heart! Never think about the past

And don’t lament about it

Don’t be disturbed think about the future

Face it, whichever might come in life.

 

There is no life without worries

And there is no heart without get troubled

And defeat is not permanent one

And success never comes automatically!

 

If you stand still bewildered you will be defeated

And if you with stand courageously you will win

If you run and hide you will get perished

And you will disappear without any use.

 

Very few has created history

And they alone accomplished

Look unto them

And try to live like them.

 

Once you stand firm, then there is no suffering

And defeat has no place in your life

Try to swim against the current

And remember this is real life.

 

If you think only about the past

The hunger won’t go automatically

Therefore fight again in a new way

And try to create new things in life.

 

Mathigiri, 9-1-18, 10.30 pm.

 

Accepting defeat is the worst scenario in life.  Of course often we will fail, but we should never accept defeat.  We might have several lost battles but ultimately we have to win the war. Those who created history lived never accepting defeat in their life.  There is no point of think about the past—whether failures or success, but need to press forward to achieve in life.  History can teach us, but it will repeat exactly the same way as it happened.

 

399 தோல்வியை ஏற்காதே

 

போனதை மனமே நினைக்காதே

புலம்பியே வீணில் தவிக்காதே

வருவதை எண்ணிக் கலங்காதே

வந்தால் எதிர்கொள் திகையாதே

 

கவலையில்லாத வாழவில்லை

கலக்கம் இல்லாத மனதில்லை

தோல்வி என்பது நிலையில்லை

வெற்றியும் தன்போல் வருவதில்லை

 

திகைத்து நின்றால் தோற்றிடுவாய்

துணிந்து  நின்றால் வென்றிடுவாய்

ஒடி ஒளிந்தால் ஒழிந்திடுவாய்

ஒன்றுக்கும் பயனின்றி மறைந்திடுவாய்

 

சரித்திரம் படைப்போர் சிலபேர்தான்

சாதித்து முடித்தது அவரேதான்

அவரை நோக்கிப் பார்த்துவிடு

அவர்போல் வாழ முயன்றுவிடு

 

துணிந்துவிட்டால் பின் துன்பமில்லை

தோல்விக்கு உன்னிடம் வேலையில்லை

எதிர்நீச்சல்நீ போட்டுவிட்டு

இதுதான் வாழ்க்கை உணர்ந்துவிடு

 

பழம்கணக்கை நீ பார்த்திருந்தால்

பசியும் தன்போல் போகாது

புதிதாய் எதிர்த்துப் போராடு

புதுமை வாழ்வில் படைத்துவிட்டு

 

மத்திகிரி, 9-1-18, இரவு 10.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles