Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 407

$
0
0

407 Unnecessary interference

 

One should leave me

On my own course

And should stop

Asking ‘why’?

 

You are living

Your own life

And for that

You adjust with others

 

When others interfere

You become very upset

Later you give

Reason for that

 

And when I do the same

You become angry

And you demand

Reason for that from me

 

You deny

That this is my life

And you think

That all are for your sake

 

What kind of justice is this?

That I cannot understand?

And I cannot understand

Your stubbornness

 

But I cannot go

As you demand

And that alone

I am unable to do

 

Each one should

Go on her own way

And for that

She should cooperate with them

 

And should stop

Asking unnecessary questions

And should stop

Unnecessary interference

 

If we pock our nose often

Then it will become danger

Then it is your funeral

What else can I say?

 

Don’t ask

Unnecessary questions

And don’t get trapped

In unnecessary issues

 

I don’t have energy

To say more than this

Because I don’t want to come

In this contention

 

Do whatever you want to do

And that is your problem

And saying more than this is

Unnecessary interference from my side

 

Mathigiri, 24-1-18, 11.10

 

One of my school time friend’s wife expected me to give advice to her children who in the past used to listen to me.  But as they grew up and settled in their life (arranged by their parents), now they are not ready to listen me as before.  However imagining that they will still listen and obey she often requested me to counsel them.  As I often say, I never like to give counseling or advice unnecessarily.  Though in India the so called ‘individualism’ is not so prominent, as now so many western thoughts are influencing us, the present generation prefers to ‘leave them alone’.  Though I don’t agree with it, yet I try to understand and try to ‘leave them alone’.  Every generation is on the cross road and need to learn lot to understand the changing scenario.  I think the present trend in India, particularly among the family is ‘mind your own businesses’.  Well, as a single person, I don’t know how to handle it or what to say.  But it is better keep quiet is the present remedy for such situation.

 

407 வீணான தலையீடு

 

என்போக்கில் என்னையும்

விட்டிட வேண்டும்

ஏனென்ற கேள்வியை

விட்டிட வேண்டும்

 

உனக்கென ஒருவாழ்வை

நீயுமே வாழ்கிறாய்

அதற்காகப் பிறருடன்

இணைந்துமே நடக்கிறாய்

 

பிறர்வந்து குறுக்கிட

பொங்கியே எழுகிறாய்

பின்பாக அதற்குமே

விளக்கமும் தருகிறாய்

 

அதைநான் செய்தாலே

ஆத்திரப் படுகிறாய்

அதற்கான காரணம்

ஆயிரம் கேட்கிறாய்

 

எனக்கான வாழ்விது

என்பதை மறுக்கிறாய்

எல்லாமே உனக்காக

என்றுமே நினைக்கிறாய்

 

இதுஎன்ன நியாயமோ

எனக்குமே விளங்கலை

ஏனிந்தப் பிடிவாதம்

என்பதும் புரியலை

 

ஆயினும் அதற்காக

உன்போக்கில் போகலை

அதைமட்டும் செய்திட

என்னாலே முடியலை

 

அவரவர் போக்கிலே

அவரவர் போகணும்

அதற்காகப் பிறருடன்

இணங்கியே நடக்கணும்

 

வீணான கேள்விகள்

கேட்காமல் இருக்கணும்

வேண்டாத குறுக்கீடு

தன்னையும் விடவேணும்

 

அடிக்கடி தலையிட

ஆபத்தாய்ப் போய்விடும்

அப்புறம் உன்பாடு

நானென்ன சொல்லட்டும்

 

வீணான கேள்விகள்

நீயுமே கேட்காதே

வேண்டாத வம்பிலே

நீயாக மாட்டாதே

 

இதற்குமேல் சொல்லிட

எனக்குமே தெம்பில்லை

ஏனென்றால் நானிந்த

வம்புக்கு வரவில்லை

 

என்னவோ செய்துகொள்

இனியது உன்பாடு

இதற்குமே சொல்வது

வீணான தலையீடு

 

மத்திகிரி, 24-1-18, இரவு 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles