1129 Correct me
I alone should repent
I know that
You alone should correct me
You also know that
But we should know
Who should a pay
The price
For that
As I become
Upset quickly
As I pour down
Words too much
Though I know that
Friction comes in relationship
Still the heart refuses
To repent
You told me
Several times about it
You asked me to remember
All that experienced in the past
But when I
Pour down words
I never remember
That alone
When I get stumbled
One more time
After paying a
Price for that
I remembered
What you told (about it)
Then I felt shy
As I realized it
However I took
Resolution that
I won’t do
Like this again
When anger
Blinds my buddhi
That resolution also
Get disappeared
Correct the tongue
Which cannot be corrected
Save me by
Controlling it
You better understand
That there is no means
To pay further
Price for this
If you refuse to
Correct me even after understanding this
You be ready
To pay a price for that
Mathigiri, 20-10-2019, 10.30 p.m.
All conflict in relationship is not one sided. Several times we react when we are provoked. However others need to share their part in it, still as a bhakta of the Lord finally we alone need to take the complete responsibility—even for our reaction. As I was meditating on this I wrote this song. Though I often pay a price, if the Lord refuse to correct me then finally he should be ready to pay a price for that also.
1129 திருத்திடுவாயே
நான்தான் திருந்தனும்
நானறிவேனே
நீதான் திருந்தனும்
நீ அறிவாயே
ஆனால் அதற்கு
விலையார் தருவது
என்கிற கேள்விக்கு
பதில் தெரிந்தாகணும்
ஆத்திரம் அவசரம்
படுவதினாலே
அள்ளியே வார்த்தையை
தெளிப்பதனாலே
உறவில் விரிசில்
வருவது தெரிந்தும்
உள்ளம் மட்டும்
திருந்திடக் காணோம்
எடுத்து பலமுறை
நீயுமே சொன்னாய்
இதுவரை பட்டதை
நினைந்திடச் சொன்னாய்
ஆயினும் வார்த்தையை
உதிர்த்திடும் போது
அவையும் நினைவுக்கு
வருவதே இல்லை
மீண்டும் ஒருமுறை
தவறிய பின்பு
அதற்கொரு விலையைத்
தந்தத்தின் பின்பு
நீயும் சொன்னது
நினைவுக்கு வந்தது
நெஞ்சும் உணர்ந்து
நாணம் கொண்டது
இனிமேல் இதுபோல்
நானும் செய்யேன்
என்று உறுதி
எத்தனைக் கொண்டும்
ஆத்திரம் அறிவை
மறைத்திடும்போது
அந்த உறுதியும்
மறைந்து போகுது
திருந்தா நாவை
திருத்திடுவாயே
அதனை அடக்கி
காத்திடுவாயே
இதற்கும் மேலே
விலையும் தந்திட
வழியே இல்லை
புரிந்திடுவாயே
புரிந்த பின்னாலும்
திருத்திட்ட மறுத்தால்
விலையும் தந்திட
வந்திடுவாயே
மத்திகிரி, 20-10-2019, இரவு, 10.30