எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
திரு ராஜன் சிற்பி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவில் உள்ள சில உண்மைகளை மட்டும் கூறுவதுதான் என் நோக்கம். மற்றபடி அவர் முயற்சிக்கும் சீர்திருத்தத்திற்கு எதிரானது அல்ல.
அவர் இந்த திருமண மந்திரத்தை முழுமையாகக் கூறி, அதற்கு வார்த்தைக்கு வார்த்தை அர்த்தமும் தந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆனால் அவர்போல் எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. எனவே அவர் கூறாத, எனக்கும் தெரியாத மந்திரத்தை நான் கூற முடியாது.
ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எந்த இடத்தில் ‘நானும் கற்பழித்து நாலாந்தரமாக இந்த சூத்திரனுக்குத் தருகிறேன்’ என்று கூறிஇருக்கக் கூடும் என்பதும் புரியவில்லை
முதலில் இது குறித்து விபரம் தெரிந்தவர்கள் கூறுவதை பார்க்கலாம்:
Some of the Grihya–Sutrtas include another mantra, also taken from the Vedic text, which says that the bride is given over to many by three gods who were her first three husbands, viz., Soma, Gandharva and Agni; the mantra recited before the nuptial fire is: “Soma had acquired thee first as his wife; after him the Gandharva acquired thee, thy third lord was Agni; and, the fourth is thy human husband. Soma has given thee to the Gandharva, the Gandharva gave thee to Agni. Besides thee, O wife, Agni has (as good as) given wealth and children to me”. Yajnavalkya is perhaps interpreting this very Rigvedic mantra when he says that the God Soma conferred purity (saucham) upon the woman, Gandharva bestowed upon her a sweet tongue (subhaam giraam), while (p.168) Pavaka (i.e. Agni) bestowed upon her perfect purity (sarvame dhyatvam). {Yaj. i.71}.— Pandharinath H. Prabhu, Hindu Social Organization: A Study in Socio-Psychological and Indeological Foundations, Bombay, Popular Prakashan, [1940], Reprint 2004, pp. 168-69
RV X.85.40: Soma possessed (you) first; a Gandharva possessed (you) next. Agni was your third husband; your fourth is human-born.— Stephanie W. Jamison, Sacrificed Wife; Sacrificer’s Wife: Women, Ritual, and Hospitality in Ancient India. Delhi, Oxford, 1996p. 140
On the day of marriage the bride was bathed in water consecrated with Vedic verses and a yoke was held over her head [Atharva Veda. xiv.1.40]. She was then dressed with the recital of verses…. Then the actual wedding rite began. The bride was made to stand on a stone, to represent “the lap of earth. The bride-groom took her hand muttering appropriate verses and promised to cherish her…. The bride was first the wife of Soma, then of Gandharva, then of Agni who lastly bestowed her on her human husband [Atharva Veda xiv.2.2-11]….— Rajbali Pandey, Hindu Samskaras: Socio-Religious Study of the Hindu Sacraments, Delhi, Motilal Banarsidass, (Second Revised Edition, 1969), Reprint, 1987 p.201
மேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஆசிரியர்களும் மந்திரம் ஓதும் பார்பனும் மணப்பெண்ணை ‘கற்பழித்த பின்’ மணமகனுக்கு தருவதாக குறிப்பிடவில்லை. முதலில் சோமனுக்கும், பிறகு கந்தர்வனுக்கும், அதன்பின் அக்கினிக்கும் அதன்பின் அக்கினி அவளை மனிதனாகப் பிறந்த இந்த மணமகனாகிய நான்காவது கணவனுக்குத்தருகிறேன் என்றுகூறுவதாக மேற்கண்ட மூன்றுவல்லுனர்கள் தகுந்த ஆதாரத்துடன்கூறுகிறார்கள்.
ஒரு பேச்சுக்காக சோமன், கந்தர்வன் மற்றும் அக்கினி முதலில் மணந்ததாக இருந்தாலும், அவர்கள் அப்பெண்ணுடன் புணர்ந்ததை ‘கற்பழிப்பாகக்’ கருத முடியுமா. அப்படி என்றால் அனைத்து கணவர்களும் அதைத்தான் செய்கிறார்களா?
மேலும் ஒரு பேச்சுக்காக மந்திரம் ஓதும் பார்ப்பனனும் அப்பெண்ணை மணந்து, புணர்ந்தபின் மணமகனுக்கு திருமணம் செய்து தருவதாக சமஸ்கிருதத்தில் கூறினாலும் அது நடைமுறை சாத்தியமா? அப்படியே நடந்தாலும் அது ‘கற்பழிப்பா?
திரு ராஜன் நேரடியாக பார்பனர்கள் அல்லாதவர்களிடம் மற்றவர்கள் உழைப்பில் உயிர் வாழும் இது போன்ற பாற்பனர்களை வைத்து திருமணம் செய்யாதீர்கள் என்று சீர்திருத்தக் கருத்தைக் கூறினால் அதில் எந்த தவறும் இல்லை. அது ஒன்றும் இவர் முதன் முதலாக சொல்லும் கருத்தும் அல்ல. பெரியார் செய்யாத சீர்திருத்தமா, அவர் நடத்தி வைத்த சீர்திருத்த திருமணங்கள் கொஞ்சமா?
அடுத்தபடியாக தெரிந்து கொள்ளவேண்டியது பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்குச் செய்யப்பட்டும் திருமண சடங்கில் புராண மந்திரங்களை மட்டுமே சொல்லுவார்கள். இதுபோன்ற சில சட்டங்குகள்பார்ப்பனர்கள் திருமணத்தில் மட்டுமே நடைபெறும். முறையாக வேதம் பயின்ற பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு எந்தவிதமான சடங்குகளையும் செய்யமாட்டார்கள். பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்குச் சட்டங்குகள் செய்யும் அந்தணர்களை பார்பனார்கள் தங்களின் எந்தவிதமான சட்டங்களுக்கும் அழைக்க மாட்டார்கள்.
ஆனால் எல்லா திருமணத்திலும் கூறப்படும் பொதுவான வேத மந்திரங்களை மட்டுமே பார்பனார்கள் அல்லாதவர்களின் திருமணத்திலும் கூறுவார்கள். அது இதுதான்:
மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸூபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!
’மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக.’–தின மலர். ஆன்மிக மலர். அக்டோபர், 23, 2010, ப. 3
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாதவர் திருமணகங்களில் ஐயர்த்தான் இந்த மந்திரத்தைச் சொல்லுவார். அதாவது ‘’நான் உன்கழுத்தில் தாலி கட்டுகிறேன்’’ என்று. ஆனால் கட்டுவது மணமகன். ‘’நான்தானே மந்திரம் சொன்னேன், நான்தான் கட்டுவேன் என்று எந்த ஐயரும் அடம்பிடிப்பது இல்லை. அதுபோல் ‘’நீதானே தாலி கட்டுகிறேன் என்று மந்திரம் சொன்னாய் நீயே கட்டு என்று மணமகனோ, மற்றவர்களோ ஐயரை கட்டாயப்படுத்டுவதும் இல்லை. அப்படி சொன்னால், ஐயர், தட்சிணைக் கூட வேண்டாம் என்று, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார். ஏற்கனவே ஒரு திருமணம் செய்த அவருக்கும் தெரியாதா அது பற்றி. பார்ப்பனர் திருமணத்தில் மட்டுமே பெரும்பாலும் ஐயர் இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லச் சொல்ல மணமகனும் ‘’மந்திரம் சொல்லி’’ தாலி கட்டவேண்டும்.
இதற்குக் காரணம் மந்திரம் சொல்லி தாலி கட்டவேண்டும் என்ற நியதி பார்ப்பனர்களுக்கு இருப்பதாக இருக்கலாம். அல்லது சூத்திரர்கள் வேத மந்திரத்தைச் சொல்லக்கூடாது என்ற வழக்கமாக இருக்கலாம். ஆனால் இது கூட சரியாக இருக்காது. ஏனென்றால் சூத்திரர்கள் மந்திரத்தை கேட்கவும் கூடாது என்ற ஒரு வழக்கமும் இருக்கிறது. எனவே கேட்பவர் ஏன் சொல்லக்கூடாது? ஒருவேளை பார்ப்பன மணமகனுக்கு சிறுவயது முதலே சில சமஸ்கிருத ஸ்லோகங்கள் மந்திரங்கள் தெரியும் என்பதால் அவன் கேட்டு சரியாகத் திரும்பச் சொல்ல முடியும் என்பதால் இருக்கலாம்.
இறுதியாக ஒரு செய்தி. பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்குத் திருமணம் மற்றும்
பிற சட்டங்குகளைச் செய்யும் அந்தணர்கள் முழு நேரமாக இதை செய்வதில்லை.
அவர்கள் மற்ற வழியில் பொருளீட்டுக் கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது
இதுபோன்ற சட்டங்குகளை நடத்தி அதிகப்படி வருமானம் ஈட்டுவார்கள்.
சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் பரப்புவதில் தவறு இல்லை. ஆனால் ஒரு
குறிப்பிட்ட இன மக்கள் மீது வன்மம் கொண்டு இதுபோன்று தவறான தகவல்களை தவிர்ப்பது நல்லது. அதைக்காட்டிலும் அந்த தகவல் சரியானதா என
சரிபார்க்காமல் பிறருக்கு அதை பகிருவது அதைக்காட்டிலும் தவறான செயலாக
முடியும். பார்ப்பனர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.
ஆனால்அது சரியான ஆதாரத்தோடு செய்தால் செய்பவர்கள் செயலைப் பாராட்டலாம். ஆனால் வெறும் விளம்பரம் தேடுவதற்காக இதுபோன்ற செயல்களை செய்வது சமுதாயஇணக்கத்துக்கு மாத்திரம் அல்ல சீர்திருத்தத்திற்கும் எதிரானது.
அதனால்தான் திருவள்ளுவர் ‘அறிவுடைமை’ என்ற அதிகாரத்தில் சரியாகச் சொன்னார்:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு–குறள் 422
Though things diverse from divers sages’ lips we learn, ‘It is wisdom’s part, in each the true thing to discern.
Explanation: To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
எண்பொருள வாகச் செலச்சொலித் தான்பிறவாய்
நுண்பொருள் காண்பது அறிவு.–423
Wisdom hath use of lucid speech, words that, acceptance win. And subtle sense of other men’s discourse takes in.
Explanation; To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.
அறிவுடையார் எல்லாம் உடையார்
என்னுடைய ரேனும் இலர்.—430
The wise is rich, with every blessing blest. The fool is poor, of everything possessed.
Explanation: Those who possess wisdom, possess every thing, those who have not wisdom, whatever they may possess, have nothing.
பார்ப்பனர் எதிர்ப்பு எனபது ஏதோ இன்றுபுதிதாக நம் நாட்டில் நடக்கவில்லை. இதிகாச புராணகாலங்க்காளிலும் இது உள்ளது. ஆனால் இன்று பார்ப்பனர்கள் அல்லாதவர்களிடையே உள்ள ஜாதி சண்டையில் பார்ப்பனர்கள் ‘பாலி ஆடுகளாக’ ஆக்கப்படுகிறார்கள். இதுகுறித்து அடுத்த தலைப்பில் எழுதுகிறேன்.
தயானத் பாரதி
26-09-2019
பகுதி நான்கு: விடுபட்ட குறிப்பு
திரு ராஜன், ஐயர் மணமகனுக்கு கங்கணம் கட்டும்போது மணப் பெண்ணை ‘கற்பழித்து இந்த சூத்திரனுக்கு’ நான்காவதாக கொடுப்பதாக கூறுகிறார். ஆனால் ஏற்கனவே அப்பெண் சோமன், கந்தர்வன், அக்கினிக்கு என்ற மூன்று பேருக்கு மனைவியாக்கப் பட்டுள்ளாள், இப்போது மணமகன் நான்காவது என்றால் ‘ஐயர்’ எந்த கணக்கு? அவரையும் சேர்த்தால் ஐந்தாகிவிடுமே? ஆனால் வேதமந்திரத்தின் படி மூன்று தேவர்களைத்தவிர மணமகன்தான் நான்காவது கணவன். இக்கணக்கின்படி பார்த்தால் திரு ராஜன் மணப்பெண்ணை ஐயர் மணந்ததாகவோ, கற்பழித்ததாகவோ கூறுவது கணக்கில் இடிக்கிறது. சமஸ்கிருதம் இவ்வளவு ஆழமாகத் தெரிந்த திரு ராஜானுக்கு சாதாரண கணக்குத் தெரியாமல் போந்துதான் பெரிய விந்தை!
இந்த பதிவை அனுப்பியவர் எனக்கு என் இந்த விளக்கத்திற்கு பதில் தரும்போது ‘கல்யாணம் நடத்தும் பிராமணன் மனதளிவில் கூட (இவ்வாறு) நினைக்கக்கூடாதே. தமிழ் மொழியில் இந்த மந்திரம் சொல்ல வேண்டியது தானே’? என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். திருமணம் நடத்திக்கொடுக்கும் ஐயர் மந்திரத்தை எந்த மொழியில் சொல்லவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது. அது திருமணத்தை ஏற்பாடு செய்பவர்கள் கையில் உள்ளது. கோயில்களில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும் வசதி உள்ளது. யாருக்கு எது விருப்பமோ அதில் செய்து கொள்ளலாம். இதில் அர்ச்சகர் தலையிட முடியாது.
வேதமுறைப்படி வேதமந்திரம் சொல்லி திருமணம் செய்யவேண்டும் என்ற கட்டுபாடு பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு கிடையாது. எனவே அவர்கள் சமஸ்கிருதத்தில் மந்திதரம் சொல்லி வேதமுறைப்படி செய்யவேண்டும் என்ற மூடப் பழக்கத்தில் இருந்து வெளிவரவேண்டும். அதைவிடுத்து ‘பார்ப்பானைப் பார்த்து கழுத்தையும் பரதேசம் போன கதையாக’ அதையேன் மற்றவர்கள் செய்யவேண்டும். அதே சமயம் அவ்வாறு செய்யப்பட்டும் திருமணத்தை பார்ப்பனர்கள் எதிர்க்கமுடியாது. திருமணம் நடத்திவைக்கும் ஐயர் கூலிக்கு மாரடிப்பவர். ஆனால் இங்கு பிரச்சனை மந்திரத்தை எந்த மொழியில் சொல்லவேண்டும் எனபது அல்ல. என்கேள்வி வேதத்தில் எந்த இடத்தில், எந்த மந்திரத்தில் ‘நானும் கற்பழித்து இந்த சூத்திரத்தினக்கு நான்காவது கணவனாகக் கொடுக்கிறேன்’ என்று கூறி உள்ளதை திரு ராஜன் ஆதாரத்துடன் கூறவேண்டும். அவ்வாறு வேதத்தில் இருந்ததால் அது தவறு மட்டும் அல்ல, குற்றமும் ஆகும். எனவே அவர் முறைப்படி அது குறித்து காவல் துறையில் புகார் தந்து நீதிமன்றத்திலும் பொதுநல வழக்காடி அத்தகைய மந்திரத்தை திருமணங்களில் கூறுவதற்கு தடை வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால் அதற்கு எல்லா பார்ப்பனர்களும் நிச்சயமாக துணை நிற்பார்கள்.
இல்லாத ஒருமந்திரத்திற்கு தேவையற்ற விளக்கம் தந்து சமுதாய சீர்திருத்தம் என்றபெயரில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீது வெறுப்புணர்வை விதைப்பது சமுதாய சீர்திருத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க முடியாத ஒரு செயல்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மந்திரம் பார்ப்பன மணமகனுக்கும் சொல்லப்படும். அப்படியானால் அவனை எப்படி சூத்திரன் என்று ஐயர் கூறுவார்? திரு ராஜன் கூறுகிறார் இந்த மந்திரம் சொல்லும் ஐயருக்கே அதன் அர்த்தம் தெரியாது என்று. ஐயருக்கே தெரியாத அர்த்தத்தை இவர் தரும்போது அதை சரியாகத் தரவேண்டும் என்பதே என் வேண்டு கோள்.
அடுத்த படியாக அவர்: கந்தர்வ விவாகம் என்பது ஒருவித கற்பழிப்புதானே….அவர் (ராஜன்) உபயோகித்த கற்பழிப்பு என்பது தவறே’ என எனக்கு பதில் அனுப்பி உள்ளார்.
கந்தர்வ விவாகம் என்பது ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு திருமணத்திற்கு முன்பே புணர்வது. எனவே அதுவும் கற்பழிப்பாகாது. மேலும் இங்கு கூறப்படும் ‘கந்தர்வன்’ என்பது ஒரு தேவன். அது கந்தர்வ விவாகம் அல்ல. எட்டு வகை திருமணத்தில் அசுர விவாகம் என்பது பெண்ணின் விறுப்பாம் இல்லாமல் அவளைக் கடத்திச் சென்று புணர்வது. இதுதான் கற்பழிப்பு. தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ‘களவு நெறி’ ‘கற்பு நெறி’ என இரண்டு வகையாக திருமணத்தைக் குறிப்பிடுகிறார்கள் இதில் களவு நெறி என்பது கந்தர்வ விவாகம் ஆகும்.
என்விளக்கம் திரு ராஜன் உபயோகித்த ‘கற்பழிப்பு’ என்பது மாத்திரம் தவறு அல்ல. அந்த மந்திரத்தில் எந்த இடத்திலும் ஐயர் அப்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறப்படவே இல்லை என்பதுதான். ஆனால் சமஸ்கிருதம் நன்றாகத் தெரிந்த திரு ராஜன்தான் என் ஐயத்தை போக்க வேண்டும்.
பகுதி ஐந்து
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அக்கினித்தான் மணமகனுக்கு சோமன், கந்தர்வன் மணந்தபின் தான் மணந்து பிறகு மணமகனுக்கு நான்காவது கணவனாக அப்பெண்ணைத் திருமணம் செய்து தருவதாக மந்திரத்தில் உள்ளது. இதுகுறித்து ஒரு கற்பனையான கதையை இனிக் காணலாம். இது வெறும் கற்பனைத்தான்.
கடவுள் மனிதனைமட்டும் படைத்தபின், அவன் எவ்விதக் கவலையும் இன்றி இயற்கையோடு இணைந்து தன்னை படைத்த இறைவனைப்பற்றி கூட நினைக்காமல் வாழ்ந்தான். அப்போது இறைவன் இந்த மனிதன் என்னை நினைப்பதே இல்லை. எனவே இவன் அடிக்கடி என்னை நினைக்கும் படி ஒரு காரியம் செய்யலாம் என எண்ணி அவனுக்கு துணையாக அழகான ஒரு பெண்ணை படைத்தான். அதை கவனித்த மற்ற தேவர்கள் அவள் அழகில் மயங்கி அவளை தாங்களே அடையவேண்டும் என்று எண்ணி இறைவனிடம் அவளை எக்காரணம் கொண்டும் மனிதனுக்குத் தரமாட்டோம் என அடம் பிடித்தார்கள். இறைவன் அவளை படைத்ததின் இரகசியத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்கள் ஏற்க மறுத்தனர். எனவே இறைவன் சரி இவர்களும் இவள் மூலம் ஒரு பாடம் கற்கட்டும் என்று அவர்களின் விருப்பத்திற்கு இணங்கினான்.
ஆனால் தேவர்களுக்குள் அவளை யார் மணப்பது என்பதில் ஒரு பெரிய விவாதமே நடந்தது. அப்போது சோமன், ‘நான் இல்லாவிட்டால் நீங்கள் அனுதினம் சோமபானம் அருந்தி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே இவள் எனக்கு இல்லை என்றால், இன்றோடு சோமபானம் நிறுத்தப்படும் என்றான்.’ அதனால் வேறு வழியின்றி சோமபானத்தை இழக்க விரும்பாத மற்ற தேவர்கள் அவளை சோமனுக்கே தர ஒப்புக் கொண்டனர். அதன்பின் தேவர்களின் புரோகிதனான அக்கினியின் உதவியோடு அவளை சோமனுக்கு மணம் செய்து தந்தார்கள்.
ஆனால் காலை மணம் முடித்து மற்ற தேவர்கள் பொறாமைப் பட சோமன் அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான். ஆனால் இரவு வருவதற்குள் அவன் மற்ற தேவர்களிடம் ஓடி வந்து தன்னை அந்த மனிதப் பெண்ணிடமிருந்து காப்பாற்றும்படி கதறினான். அதற்கு காரணம் அவர்கள் கேட்ட போது, ‘இவளை மனைவியாக அடைந்த மகிழ்ச்சியில் அதிகமாக சோமபானம் அருந்தி அவளோடு இரவில் இணைய காத்திருந்தேன். ஆனால் ஒரு பகற்பொழுதிற்குள் அவள் செய்த அட்டகாசம் தாங்காமல் என் பரவசம் (போதை) எல்லாம் இறக்கிவிட்டது. எனவே இவளோடு என்னால் வாழ்முடியாது’ என்றான்.
இந்த வாய்ப்பிற்காக காத்திருந்த கந்தர்வன், அவளிடம் எப்படி அன்புடன் பழகுவது என்பது உனக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது. காதலில் கரைகண்ட எனக்கு மட்டுமே ஒரு மானிடப்பெண்ணை எப்படி மகிழ்விப்பது என்பதுதெரியும் எனவே எனக்கு அவளை மனைவியாகத் தரவேண்டும் என்றான். அதனை ஏற்று மறுபடியும் அக்கினியின் உதவியோடு அவளை கந்தர்வனுக்கு இரண்டாவது கணவனாக மணம் செய்து தந்தார்கள்.
ஆனால் கந்தர்வனும் அன்று மாலையே கண்ணீரும் கம்பளையுமாக இரு கரங்களைக் கூப்பிபடி அக்கினியிடம் சென்று தன்னை காப்பாற்றும் படி கூறினான். அதற்கு சம்மதிக்காத அக்கினி மற்ற தேவர்களிடம் இது பற்றி கூற அவர்கள் யாரும் அவளை மணம் முடிக்கத் தயங்கினார்கள். எனவே தேவர்கள் அனைவரும் அதுபற்றி இறைவனிடம் சென்று முறையீடு செய்த போது அவனும் இது உங்கள் பாடு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றான்.
அப்போது அக்கினி நான் நெருப்பு எனவே இவள் ஆட்டம் என்னிடம் செல்லாது எனக்கூறி மற்றவர்கள் சம்மதத்துடன் அவளை தன் இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டான். அவன் முதல் மனைவி பெயர் ‘ஸ்வாகா’ என்பது. ஆனால் மீண்டும் ஒரே நாளைக்குள் ஸ்வாகா அக்கினியிடம் இந்த மானுடப்பெண் என்னை ஒரேநாளில் ‘ஸ்வாகா’ செய்துவிட்டாள் எனவே இவள் இனியும் இங்கு இருந்தால் இனி நான் உன்னுடன் இருக்க மாட்டேன் என்றாள். ஆனால் ஸ்வாகா இல்லாமல் அக்கினிக்கும் மற்ற தேவர்களுக்கும் மனிதர்கள் செய்யும் யாகத்தின் மூலம் கிடைக்கு உணவு கிடைக்காமல் போய்விடும் ஏனென்றால் மனிதர்கள் யாகம் செய்யும் போது ஸ்வாக்காவின் பெயரைச் சொல்லியே அக்கினியில் பொருள்களை இடுவார்கள்.
எனவே வேறு வழியின்றி அக்கினி எப்படியாவது கவலையின்றி திரியும் அந்த மனிதனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க எண்ணினான். எனவே அவன் அந்த மனிதனை நாடி இவள் உனக்காகவே இறைவனால் படைக்கப்பட்டவள். இவளை மணந்து கொண்டால் எப்போதும் இறைவனை நினைக்கும்படியான வாழ்க்கை உனக்கு அமையும் என்று சொன்னான. அதற்கு மனிதன் ‘நான் எதற்காக இறைவனை நினைக்க வேண்டும். அவன் யார்? இப்போது நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றான்.’ அதற்கு அக்கினி சில காரியம் உனக்கு சொன்னால் புரியாது. நான் சொல்கிறபடி செய். பிறகு அதுபற்றி புரியும் என்றான். எனவே எவ்வித முன்னனுபவமும் இல்லாத மனிதனும் அப்பாவித்தனமாக அக்கினி அவளை மணம்முடித்துக் கொடுக்க மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
ஆனால் அதன்பின் மனிதன் படும் பாட்டுகள் அனைவரும் அறிந்தது. ஆனால் தனக்கு இந்த கொடுமையைச் செய்த அக்கினியைப் பழிவாங்க யாகம் செய்யும்போது முதலில் அதிக நெய்யை ஊற்றி நெருப்பை கொழுந்துவிட்டு எரியச் செய்து அக்கினி மனிதன் அளிக்கும் அவிர்பாகத்தை (உணவை) வாங்க வரும்போது வேண்டுமென்றே ‘ஸ்வாக’ எனச் சொல்லி அதிக புகையை வரவழைத்து அக்கினியை அழவைத்து அவிர் பாகத்தை கொடுக்க ஆரம்பித்தான்.
இந்த புராணக் கதையை எனக்குச் சொன்ன ஐயரிடம், ‘இவ்வளவு பாடுபட்டும் ஏன் ஒய் இன்னும் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறீர் என்று கேட்டபோது ‘எல்லோரும் உன்னைப்போல் இருந்துவிட்டால் என்பிழைப்பும் தேவர்களின் பிழப்பும் எனாவது’. அதனால்தான் திருமணத்தில் ‘அக்கினி சாட்சியாக’ வைத்து நான் தட்சணையை மாத்திரம் வாங்கிக் கொண்டு இந்த காரியத்தைச் செய்கிறேன். ஆனால் இது தெரியாமல் இந்த ராஜன் சிற்பி என்னவோ நானும் ஒவ்வொரு மணப்பெண்ணையும் மணத்தபிறகு மணமகனுக்கு திருமணம் செய்து தருவதாக சொல்கிறார். இந்த கொடுமையை என்ன சொல்ல? ஒரு திருமணம் செய்து படுவது போதாதாதா? நீயாவது இதில் உள்ள உண்மையை அவருக்கு கூறு என்றதனால்தான் நான் யாருக்கும் தெரியாத இந்த புராணக்கதையை முதன்முதலாக மனித உலகிற்குக் கூறுகிறேன்.