418 Wound is our share
There is no
Means to escape
And we don’t even
Want to escape
As we tried
To find the answer for the riddle
We get trapped
In it at the end
Our poor life
Became like
The garland
In the hands of a monkey
We made the garland
Only to offer to god
But it fall on
The neck of the monkey
Once we
Tried to get back the garland
The monkey
Ran away with it
We offered
A fruit to take back the garland
But along with the garland
We lost the fruit also
After eating the fruit
And tearing the garland
The monkey
Showed its teeth for us
As we took
The stone to beat it
The monkey jumped on us
And bit us
We lost the fruit
Along with it the garland also
What we finally gained
Is the wound alone?
Mathigiri, 7-2-18, 6.05 am.
Several times in life, particularly in solving so many problems related to life what we gain at the end is mere wounds and not solutions and results. As I was experiencing this I wrote this song depicting my present situation.
418 காயம்தான் மீதம்
தப்பிக்க வழியோ
ஏதுமே இல்லை
தப்பிக்க விருப்பம்
நமக்குமே இல்லை
சிக்கலை அவிழ்க்க
விடையைத் தேட
சிக்கலில் நாமே
மாட்டிக் கொண்டோம்
குரங்குகின் கையின்
மாலை போல
ஆனது பாவம்
நமது வாழ்வு
சாமிக்குப் போட
மாலையைத் தொடுக்க
குரங்கின் கழுத்தில்
வீழ்ந்தது அதுவும்
மாலையை எடுக்க
முயலும் போது
குரங்கு பிடித்தது
மீண்டும் ஓட்டம்
மாலையை மீட்க
பழத்தைக் கொடுக்க
பழமும் போனது
மாலை யோடு
பழத்தைத் தின்று
மாலையைப் பிய்த்து
குரங்கு இளித்தது
நம்மைப் பார்த்து
குரங்கை அடிக்க
கல்லை எடுக்க
அதுவும் கடித்தது
நம்மேல் பாய்ந்து
பழமும் போச்சு
மாலையும் போச்சு
பட்ட காயம்தான்
மீதம் ஆச்சு
மத்திகிரி, 7-2-18, காலை, 6.05