419 Everything is only for good
Everything is only for good
And whatever happens that is also good
Ups and downs are there
Only to bestow some benefit to us
The meaning of human life
Is only in living as human
In order to realize this
We need the help of others
We born with relatives and neighbors
And we gained many friends and relatives
There is no use in life without their help
This also we understood
But how to say definitely
What ultimately is the genuine relationship?
How can we give any?
Definite explanation for that?
Parents will be gone one day
Siblings also will get parted
Relatives and neighbors also will disappear
And those joined us will also get separated
Which one will remain permanently with us?
We are not sure about it
Life will be mingled with ups and downs
And there is no means to deny this
If others come celebrate it by welcoming them
And if they get separated, send them away with blessings
Live knowing that
Whatever happens is only for good
Mathigiri, 7-2-18, 11.30 pm.
My one time response to the question (what is the purpose of this life?) is this: THE PURPOSE OF THE LIFE IS JUST TO LIVE. Beyond this I cannot think any other genuine answer which will convince my rationalistic mind. All other metaphysical thoughts are genuine efforts to go beyond the normal everyday life. But to live this life, we need others who alone can help even to live it. And in this the definition for relationships and friendship often gets changed according to our response to others. There is a proverb in Tamil: Thevaikku Yerppa Uravu (தேவைக்கு ஏற்ப உறவு)= relationship is according to the need. As I was reflecting about it I wrote this song.
419 எல்லாம் நன்மைக்கே
எல்லாம் ஒருவிதம் நல்லதற்கே
எது நடந்தாலும் நன்மைக்கே
எழுச்சி தாழ்ச்சி என்பதெல்லாம்
ஒருவித நன்மை செய்வதற்கே
மானிட வாழ்வின் அர்த்தமுமே
மனிதனாய் வாழ்வதில் உள்ளதன்றோ
அதையும் நாமும் அறிவதற்கே
அடுத்தவர் உதவியும் தேவையன்றோ
ஊருடன் உறவுட பிறந்துவிட்டோம்
உற்றமும் சுற்றமும் பலவும்பெற்றோம்
வாழ்க்கையில் அவரின் துணையன்றி
வாழ்வதில் பயனில்லை அறிந்துகொண்டோம்
ஆயினும் உறவு இதுவென்று
இறுதியாய் எதனைக் கூறுவது?
அதற்கு இதுதான் விளக்கமென்று
எதைநாம் உறுதியாய்ச் சொல்லுவது
பெற்றோர் ஒருநாள் போய்விடுவார்
உடன்பிறந்தோரும் விலகிடுவார்
உற்றமும் சுற்றமும் மறைந்திடுவார்
இணைந்தவர் கூடப் பிரிந்திடுவார்
நிரந்தரமாக இருப்பத்தெது
என்பது நிச்சயம் தெரியவில்லை
ஏற்றமும் தாழ்வும் கலந்திருக்கும்
இதனை மறுக்க வழியும்மில்லை
வந்தால் ஏற்றுக் கொண்ட்டாடு
பிரிந்தால் வாழ்த்தி அனுப்பிவிடு
எதுநடந்தாலும் அது நன்மைக்கே
என்றே நினைத்து வாழ்ந்துவடு
மத்திகிரி, 7-2-18, இரவு 11.30