Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 421

$
0
0

421 I won’t live in vain

 

Somehow the youth hood has gone

Now old age has come

When I think the life that lived so far

Only I have to laugh (at me)

 

For some reason two people begot me

And somehow brought me up

Joining with them others too

Made me to live on this earth

 

I lived not knowing about life

I grew not growing in mind

Somehow I managed to move the days

Now I have woken up

 

Though wisdom came very late

The days which are gone never going to come

There is no point of

Lamenting about it now

 

Therefore I have decided to

Live a full life in this old age

There is no point of regretting after missing this too

Now I realized this.

 

Therefore I will live the rest of the life

As I desired

Till Yama comes to call me

I will live alone within me

 

Not going outside unnecessarily

And not doing unnecessary works

Not talking vain talks

I will live wisely.

 

Mathigiri, 19-2-18, 2.45 pm.

 

My one longing in life is to live a life of recluse like Emily Dickenson of America.  Though I tried various times to live such life, due to various reasons I cannot have it.  But now my old age gave this golden opportunity to live a life which I want to have.  There is no point of regretting which I missed so far in life.  Now I need to organize the present life so that I can compensate those loses.  As I was thinking about it I wrote this song.

 

421 வீணாய் வாழமாட்டேன்

 

என்னவோ இளமையும் போயாச்சு

இப்போ முதுமையும் வந்தாச்சு

இதுவரை வாழ்ந்ததை நினைத்துவிட்டால்

எனக்கே சிரிப்பு வந்தாச்சு

 

ஏனோ இருவர் பெற்றுபோட்டார்

எப்படியோ எனை வளர்த்துவிட்டார்

இவருடன் சேர்ந்து உலகோரும்

என்னை வாழவும் செய்துவிட்டார்

 

வாழ்ந்தேன் வாழத் தெரியாமல்

வளர்ந்தேன் மனதில் வளராமல்

என்னவோ நாட்களை கடத்திவிட்டேன்

இப்போ வந்து விழித்துக்கொண்டேன்

 

காலம் கடந்து ஞானம்வந்தும்

போன நாட்களோ வரவில்லை

அதனை எண்ணி இப்போது

அழுவதால் எவ்விதப் பயனுமில்லை

 

மிஞ்சிய இந்த முதுமையிலே

முழுதாய் வாழ முடிவு செய்தேன்

இதையும் வீணாய் வாழ்ந்துவிட்டு

வருந்திப் பயனில்லை நானுணர்ந்தேன்

 

எனவே எனக்கு பிடித்தவண்ணம்

எஞ்சிய வாழ்வில் வாழ்ந்திருப்பேன்

எமனும் வந்து அழைக்கும்வரை

என்னுள் தனித்து வாழ்ந்திருப்பேன்

 

வீணே வெளியே போகாது

வேண்டா செயல்கள் செய்யாது

வெட்டித் தனமாய் பேசாது

கெட்டிக் காரனாய் வழ்திடுவேன்

 

மத்திகிரி, 19-2-18, மதியம் 2.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles