422 None is there
Many are there
Who will come and go
In between
In Our lives
Tell me
Who will remain?
With you
Till the end
Though many are
There as our relatives
Though friends
Might come to have fellowship
As each one has
Gone in their own way
We might be
Left alone at the end
Though many
Will be present physically with us
Some kind of loneliness
Will come in our mind
Though many
Will be there to talk
With whom we
Shall share our thoughts?
Once we
Realized this truth
Our expectation
Will also disappear
Once we realized this
Accepting this truth
We should try to live
Peacefully all alone.
Mathigiri, 22-2-18, 10.45 pm.
Another song of my favorite topic of try to live a life of recluse. Those who do not have this kind of orientation in life will long to have people around them to talk and share. But a recluse should accept the reality that she cannot share her inner thoughts as it is beyond communication. And the only way to enjoy the life of recluse is to find that inner peace turning within than going out. I know such songs might irritate some and they can even think that these kinds of songs are in one way express my longing to have communication with others. But as I often insist, I write only for me and not for others and if others read any kind of (biographical) information I am not responsible for that.
422 யாருமே இல்லை
இடையினிலே வந்து
இடையினிலே போகும்
அநேகர் நம்
வாழ்விலே உண்டு
இறுதி மட்டும்
நிலைத்து நிற்பவர்
எவரென்று என்னிடம்
நீயுமே சொல்லு
உறவென்று சொல்லிட
பலரிங்கு இருந்தும்
உறவு கொண்டாடி
நண்பர்கள் வந்தும்
அவரவர் பாதையில்
பயணித்து போனபின்
நாம்மட்டும் தனியே
இருக்கவே நேரிடும்
உடலோடு சிலபேர்
கூடவே இருந்தாலும்
மனதிலே ஒருவித
தனிமையும் வந்திடும்
பேசிப் பழக
பலர்சூழ நின்றும்
எண்ணத்தை எவரிடம்
பகிர்ந்திடக் கூடும்
இந்த உண்மையை
புரிந்து கொண்டபின்
எதிர்பார்ப்பு இங்கே
மறைந்திடக் கூடும்
இதனை உணர்ந்தபின்
மனதினில் ஏற்று
அமைதியாய் தனிமையில்
வாழ்ந்திட வேண்டும்
மத்திகிரி, 22-2-18, இரவு 10.45