1138 You take care
This life is given by you, so you take care of it
This body is given by you, so you protect it
Just tell me what should I do?
And you lead me accordingly
I never lived thinking that this is my life
I never left you since the day you redeemed me
Though I forgot you sometimes in between
There is no shortage in my love for you
I don’t have the capacity to understand
This your noble love that you have for me
What I know is very little
Still I cannot measure its breadth, length, depth and height
It never came within the limit of intellect
I am not competent enough to research about it
However your Veda teaches about it to me
Still my heart never understood in its totality
But when you came near to me
And when the tip of your fingers touched me
As the bliss that I received overcame me
I begged you to go away from me
Seeing my condition as you took pity on me
By tying the towel on your waist you have done seva to me
As my body along with heart and atman melted by it
By carrying me on your hands like a baby you fondled me with much love
Like a child which was comforted on the hands of its mother
As I looked at your face removing my fear
You hugged me again by kissing me on my head
I gave me completely in your hands
Therefore you look after this life which was given by you
Along with the body you protect my mind also
You give your grace like this and overlord like this
By giving boon to worship you like this everyday
Mathigiri, 5-11-2019, 10.30 p.m.
I retired to my room with much tired. I was not in a mood even to read my regular reading in Muktiveda. At the same time I don’t want to go to bed. So I sat quietly and began to talk with the Lord. Then the first line of this song in Tamil came as my request to him. As the inspiration came I wrote this song. As I began to write line by line, I feel refreshed both in my body and mind. I felt some kind of comfort which an infant experiences when the mother takes it and fondle it by hugging it and kisses on its head. Literarily I imagined as if I become like an infant and the Lord becoming my mother. I don’t say that I have seen a vision but I merely imagined about it as I was writing those lines. As I was revived both in my body and mind again, after writing this poem I continued my regular reading and retired to bed very late after midnight
1138 நீ பார்த்துகொள்
நீதந்த வாழ்விது நீபார்த்து கொள்ளணும்
நீதந்த உடலிது நீகாத்துக் கொள்ளணும்
நான்னென்ன செய்யணும் அதைமட்டும் சொல்லுணும்
அதன்படி என்னையும் நீயுமே நடத்தணும்
என்னிந்த வாழ்வென இதுவரை வாழலை
எனைமீட்ட நாள்முதல் உனைவிட்டு விலகலை
இடையிடை உன்னையே சற்றுநான் மறக்கிணும்
உன்மீது நான்வைத்த அன்பிலே குறைவிலை
என்மீது நீகொண்ட உயர்உந்தன் அன்பினை
முழுமையாய் உணர்ந்திடும் திறனுமே எனக்கிலை
அறிந்தது கொஞ்சம்தான் ஆயினும் அதனின்
அகலம், நீளம், ஆழம், உயரத்தை அளக்கலை
அறிவின் எல்லைக்குள் அதுவுமே வரவிலை
ஆராய்ந்து பார்த்திடும் திண்மையும் எனக்கிலை
என்னதான் உன்வேதம் எனக்கதை சொல்லிணும்
என்னுளம் அதையுமே முழுமையாய் உணரலை
ஆயினும் என்னிடம் நீயுமே வந்ததும்
அஞ்சிய என்மீது உன்விரல் பட்டதும்
நான்கொண்ட பரவசம் என்னையும் மேற்கொள
விட்டுநீ போய்விடு என்றுதான் கெஞ்சினேன்
என்னிலை கண்டநீ இரக்கமும் கொண்டதால்
இடையிலே அரைகட்டி சேவகம் செய்திட்டாய்
உடலோடு, உள்ளமும் உயிருமே தளர்ந்திட
இருகரம் ஏந்தியே பிள்ளைபோல் கொஞ்சினாய்
அன்னையின் அணைப்பிலே சுகம்கண்ட பிள்ளைபோல்
அச்சமும் நீங்கிட உன்முகம் நோக்கிட
உச்சியும் முகர்ந்து என்னையும் அணைத்திட
நானென்னை முற்றுமாய் உன்னிடம் தந்திட்டேன்
ஆகவே நீதந்த வாழ்விது பார்த்துக்கொள்
உடலோடு உள்ளத்தை நீயுமே காத்துக்கொள்
இதுபோல அனுதினம் உன்னடி தொழுதிட
வரம்தந்து முழுமையாய் என்னை நீ ஆட்கொள்
மத்திகிரி, 5-11-2019, இரவு, 10.30