Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1145

$
0
0

1145 I accept and live

 

How many unacceptable

Incidents happen in my life

However they

Come in my life

 

The faith that

You are there

Alone leads

My everyday life

 

Though my life

Became an unnecessary burden

Though I carry it

With much frustration

 

Not allowing me

To be broken by them

As your hands are upholding me

They all become very light

 

When I think about

The everyday life

Which comes on its own?

And goes on its own

 

My life becomes

Like the boat

Which is carried?

In the current of the river

 

As you came with the oar

And took the boat to the shore

Everyday life becomes

Like a penance to me

 

Like this

How many more

Unacceptable incidents

Come in my life

 

As you are there

To carry me

I too live

Accepting them

 

Mathigiri, 29-11-2019, 11.20 p.m.

 

When unacceptable things happen in life, most of the Hindus resign to fate.  Bhaktas take it as the will of the Lord.  But a sannyasi takes it part of his penance.

 

1145 ஏற்று வாழ்கிறேன்

 

ஏறக்கவே முடியாத

எத்தனை காரியம்

என்வாழ்வில் அனுதினம்

எப்படி நடந்தாலும்

 

நீயுண்டு என்கிற

நம்பிக்கை மட்டுமே

நாள்தோறும் என்னை

நடத்தியே செல்லுது

 

வேண்டாத பாரமாய்

வாழ்வுமே ஆயினும்

வெறுப்போடு அதனை

சுமக்கின்ற போதிலும்

 

ஓடிந்தே வீழாமல்

காக்கின்ற உன்கரம்

தாங்கிட பாரமும்

இலேசாகிப் போகுது

 

தன்போல வந்து

தன்போல போகும்

அனுதின வாழ்வை

எண்ணிடும் போது

 

நீர்போக்கும் போக்கிலே

போயிடும் தோணியாய்

அதனிடை என்வாழ்வின்

நிலையுமே ஆனது

 

துடுப்போடு நீவந்து

படகோட்டி கரைசேர்க்க

அனுதின வாழ்வும்

தவம்போல ஆனது

 

இதுபோல் எனாலே

ஏற்கவே இயலாத

எத்தனை காரியம்

என்வாழ்வில் வந்தாலும்

 

ஏற்றிட நீயுண்டு

என்பதை எண்ணியே

ஏற்றுமே வாழ்கிறேன்

எந்நாளும் வாழ்விலே

 

மத்திகிரி, 29-11-2019, இரவு, 11.20


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles