463 Imposing one’s view
There is no need
For us to dance
According to the
Opinions of others
It is not possible
For us to live
Just for the sake of
Others to see
We born in this world
Only to live with others
And we live with others
Only by toiling along with them
We grew in life
As others taught us
And we born
Only to share with others
But we too have
Our own opinion
And we should know
To respect it
We should give
Space for other’s opinion
Similarly one’s own opinion
Should be respected
If opinion remains
Just a one way traffic
Where is the scope
For truth in it?
When we
Understand this
There is hope for
Exchange of opinions
Avoiding imposing views
And sharing opinions
Living together
Is good for all
Mathigiri, 7-8-2018 10.30, p.m.
When other’s views are imposed not giving space for the opponent’s views then truth pays a heavy price for such one way traffic in life. Politicians know this art well. But this is not limited to politics alone. Even in everyday life, when one tries to justify her own views, at least in her mind there is no space or respect for opponents view, though she might pretend to listen it. But for a smooth life not only opponent’s view should be listened but respected though we may not agree with it.
463 கருத்துத் திணிப்பு
அடுத்தவர் கருத்துக்கு
ஆடணும் என்று
அவசியம் இங்கு
ஏதுமே இல்லை
அடுத்தவர் பார்க்க
வாழணும் என்றால்
நிச்சயம் அதுவும்
சாத்தியம் இல்லை
பிறருடன் வாழத்தான்
உலகினில் பிறந்தோம்
பிறருடன் உழைத்து
உலகில் வாழ்ந்தோம்
பிறர்சொல்லிக் கொடுக்க
வாழ்வினில் வளர்ந்தோம்
பிறருடன் பகிர
நாமுமே பிறந்தோம்
ஆயினும் நமக்கென
எண்ணமும் உண்டு
அதையும் மதிக்க
தெரியணும் நன்று
பிறரது கருத்துக்கு
இடமும் அளிக்கணும்
நமது கருத்துக்கும்
மதிப்பும் கிடைக்கணும்
ஒரு தலையாக
இருக்கும் போது
உண்மைக்கு அங்கே
வழியும் ஏது
இதனை நாமும்
அறியும் போது
கருத்து பகிர்வுக்கு
இடமும் உண்டு
திணிப்பை தவிர்த்து
கருத்தைப் பகிர்ந்து
ஒன்றாய் இணைந்து
வாழ்வதே நன்று
7-8-2018 10.30