1146 I will live with joy
I thank you
For thinking
The opportunity
To do this penance by live as a single person
When I become
Tired by thinking
Why this kind of
Life is there to live
You reminding
The call given by you
Removing my tiredness
You made me to praise you
Tears came
When I thought
About this noble status
Which I received from you
When I get
Frustrated by forgetting that call
Silently coming within me
You helped me to remember it
You gave this
Noble status
To come and talk with you
Anytime that I like
For some reason
You bestowed this life to me
Though I am
Not qualified to receive it
You arranged my life
In such a way that
There is no place of
Unnecessary worries and burdens
By providing proper place
By giving such penance to me
You gave opportunity for me
To perform this penance
Therefore not complaining
Unnecessarily about life
I will live with joy
This life of penance which you gave to me
Mathigiri, 29-11-2019, 11.50 p.m.
After writing the previous song (1145) , when I was get up to get ready to go to bed, then I said to me, ‘when others have every right to get frustrated about so many issues in life, a sannyasi should not have such frustration, as every struggle in life is part of his penance. His life as a recluse is an opportunity for him to do his penance as he does not have so many other responsibilities which every family person (man or woman) carries with her/him throughout the life. The reason for frustration in my life is that I often forget the call which god has given me. So I need to remember my call everyday to continue my life for the Lord. Then as the inspiration came I wrote this song.
1146 மகிழ்வோடு வாழ்வேன்
தனியாக இருந்து
தவமும் செய்யும்
பேற்றினை எண்ணி
நன்றியே சொன்னேன்
ஏனிந்த வாழ்வு
என்றுமே எண்ணி
சோர்வுற்று நானும்
நிற்கின்ற போது
நீதந்த அழைப்பை
நினைவுமே படுத்தி
சோர்வினை நீக்கி
துதித்திட்ட வைத்தாய்
எவருக்கு வாய்க்கும்
இதுபோன்ற பேறு
என்பதை எண்ணிட
கண்ணீரும் வந்தது
அழைப்பினை மறந்து
தவிக்கின்ற போது
அமைதியாய் வந்து
நினைந்திட வைத்தாய்
என்நேரம் உன்னோடு
நான்வந்து பேசும்
உன்னத உறவினை
எனக்குமேத் தந்தாய்
எவ்வித் தகுதி
இல்லாத போதிலும்
எதற்கோ நீதந்தாய்
எனக்கிந்த வாழ்வினை
வேண்டாத பாரங்கள்
வீணான கவலைகள்
ஏதுமே இன்றி
என்வாழ்வை அமைத்தாய்
ஏற்ற இடம்தந்து
எனக்கிந்த தவம்தந்து
அனுதினம் அதைச்செய்ய
வாய்ப்பினைத் தந்தாய்
ஆகவே இனிமேலே
குறையேதும் சொல்லாமல்
நீதந்த தவவாழ்வை
மகிழ்வோடு நான்வாழ்வேன்
மத்திகிரி, 29-11-2019, இரவு, 11.50