472 Deliverance
Deliverance; deliverance; deliverance
As the unnecessary burden has gone—there is deliverance
As the unnecessary responsibility has gone—there is deliverance
As the unwanted works came to an end—there is deliverance
It get accumulated slowly in the course of the time
Though I never asked for, the burden came on me
As others gave their shoulders
In the beginning that burden was not much heavy
As the circumstance and time also helped
Because of the initial enthusiasm its burden was not much heavy
In the course of time as other’s attitude changed
So many new responsibilities also came on me
What I that that it would be simple and light
Finally crushed me and thrashed me
When I was bewildering how to escape from it
An easy opportunity came on its own to me
As personal responsibilities came one by one on them
The burden on others also came on its own
Because of that as my burden came a bit down
Automatically my burden also reduced a lot
As I don’t have any more strength to carry
Before others put the burden again on me
Saying that it is not possible for me
I too keep away by giving a big ‘NAMASTE’
Mathigiri, 9-9-2018, 2.40 p.m.
When we see that the next generation takes our responsibility realizing that we cannot carry it anymore, some kind of release comes in our mind. Though we cannot run away from responsibility, yet we need not carry it with the same burden and pressure as we have done initially is the advantage of the old age. As I feel released from such burden, I wrote this song.
472 விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
வீணான பாரம் போனதாலே விடுதலை
வேண்டாத சுமைகள் நீங்கியதால் விடுதலை
விருப்பமில்லா செயல்கள்யாவும் முடிந்ததால் விடுதலை
கொஞ்சம் கொஞ்சமாக தன்போல் வந்து சேர்ந்தது
கேட்காத போதும் என் மேலே வீழ்ந்தது
கூடவே வந்தவர்கள் தோள்கொடுத்து நின்றதால்
கொஞ்சமாக அதன்பாரம் ஆரம்பத்தில் இருந்தது
காலம்நேரம் சூழல்யாவும் கைகொடுத்து நின்றதால்
ஆரம்பித்த ஆர்வத்தாலே அதன்பாரம் மறைந்தது
போகப்போக மற்றவர்கள் போக்கும்கூட மாறிட
புதியபுதிய காரியங்கள் அதிகம்வந்து சேர்ந்தது
எளியதாக இருக்குமென்று என்னிநானும் சுமந்தது
இறுதியாக என்னையே அழுத்தி மிதித்துப் போட்டது
எப்படித்தான் மீள்வதென்று எண்ணிநான் தவிக்கையில்
எளியதாக சந்தர்ப்பம் என்னைத்தேடி வந்தது
அடுத்தடுத்து காரியங்கள் அடுக்கடுக்காய் வந்ததால்
அடுத்தவர்கள் தலையிலேயும் பாரம் அதிகம் சேர்ந்தது
அதனாலே என்மீது சுமைசற்று குறையவே
தன்போல என்சுமை தானகாக் குறைந்தது
இதற்குமேலே சுமப்பதற்கு தெம்புயில்லை என்பதால்
இறங்கிப்போன சுமையை மீண்டும் தூக்கிவைக்கும் முன்னேமே
என்னாலே ஆகாது என்றுநானும் கூறியே
ஒதுங்கிக் கொண்டேன் நானும் கும்பிடு போட்டுமே
மத்திகிரி, 9-9-2018, மதியம், 2.40