1150 Unparallel grace
Nothing is there
Equal to your grace
There is no other god
Which takes care of me?
There is nothing on this earth
To replace the grace
There is no other end for love
Other than you
Coming seeking me
And having fellowship with me
Redeeming me
By pleading for me
Keeping me with you
And living with me
Who else is there?
Who has over lording me?
In this life
Which has fullness and shortcomings?
Removing the shortcomings
And completing the fullness
In order to live
Everyday life with satisfaction
Where is the shortage
For your grace for that
Standing and walking
Sitting and lying down
In order to praise you
The opportunities
Which you
Give to me
Is there words
To give you thanks?
Nothing is equal
To this noble status
There are no words
To explain this
There is no bliss
Other than this
There is no
End for this
This relationship
Which began in the beginning?
Realizing that
It will remain forever
Rejoining everyday
Thinking about it
I will live for ever
By joining with you
Mathigiri, 4-12-2019, 10.10 p.m.
After doing all my work, when I came to my room, some kind of bliss filled my mind; some kind of joy overcame me; the presence of the Lord filled my heart. So I was not in a mood to read anything—even Muktiveda. So I sat silently immersing me in that bills experience. When I came out of it, as the inspiration came I wrote this song as part of my meditation.
1150 ஈடற்ற கருணை
கருணைக்கு ஈடாய்
வேறொன்றும் இல்லை
காத்திடும் உன்போல்
தெய்வம் ஒன்றில்லை
அருளுக்கு மாற்று
அவனியில் இல்லை
அன்புக்கு நீயன்றி
எல்லை வேறில்லை
எனைத்தேடி வந்து
உறவுமே கொண்டு
எனக்காக வழக்காடி
எனைமீட்டுக் கொண்டு
உன்னோடு வைத்து
என்னோடு வாழ்ந்து
ஆட்கொண்ட உன்போல்
வேறெவர் உண்டு
நிறைவும் குறைவும்
கலந்த வாழ்வில்
நிறைவினில் நிறைந்து
குறைகளைக் களைந்து
அனுதின வாழ்வை
நிறைவுடன் வாழ
அருளிடும் அருளுக்கு
குறைவேது உண்டு
நின்றும் நடந்தும்
இருந்தும் கிடந்தும்
என்றும் உன்னையே
வாழ்த்திட வென்று
எனக்கு நீதரும்
தருணங்கள் எண்ணி
நன்றி சொல்லிட
வார்த்தையும் உண்டோ
இந்த பேறுக்கு
ஈடிணை இல்லை
இதனை விவரிக்க
வார்த்தைகள் இல்லை
இதுபோல் பரவசம்
வேறொன்றும் இல்லை
இதற்கு முடிவு
என்றுமே இல்லை
ஆதியில் தொடங்கிய
இந்த உறவு
நீடித்து நிற்க்கும்
என்பதை உணர்ந்து
அனுதினம் அதனை
எண்ணி மகிழ்ந்து
நீடித்து வாழ்வேன்
உன்னுடன் இணைந்து
மத்திகிரி, 4-12-2019, இரவு, 10.10