1155 Why this old age?
Unless you take pity
I cannot live
Unless you give
I cannot get comfort
In this life on the earth
Which I see
Unless you come and bear
I cannot carry
Like the boat
Which is tossed?
On the ocean
In which there is no direction
Like the light house
Standing on the shore
Unless you stretch your hand and call
I cannot reach the shore
In the old age in which along with body
Mind also became weak
As each day’s life
Becomes like a Yuga
Unless you come and protect
Remaining each second with me
Even a single day life
Won’t move on this earth
Why you kept this
Stages of youth
And old age
To this body
Why you put
This a part of nature
For the body to become
Its own burden
Beginning from youth
Till the old age
So many questions
Like this come
Though the world
Gives thousands of answer
My heart refuses
To accept them
In order to give
An opportunity like this
To come and to
Talk with you
Which I won’t
Get often
Did you give?
This old age
Whatever might it be?
You gave the
Opportunity to
See this old age
Therefore to spend
Rest of the life in you
Bestow your
Grace to me
Mathigiri, 15-12-2019, 11.00, p.m.
Old age is indeed a burden for all. But a bhakta it is an opportunity to spend more time with the Lord. When I toss on my bed without sleep, I use the time to talk more with the Lord about various things. Even we debate theological issues. I use the time also to argue with him. So old age sets many restrictions, it also gives more opportunity to the heart to enjoy its time with god.
1155 ஏனிந்த முதுமை
நீபார்த்து இரங்காமல்
நான்வாழ முடியாது
நீவந்து தராமல்
ஆறுதல் கிடையாது
நான்பார்த்து வாழ்கின்ற
உலக வாழ்விலே
நீவந்து தாங்காமல்
சுமக்க இயலாது
திசையில்லா கடலிலே
செல்கின்ற படகாக
தடுமாறி இவ்வாழ்வு
தத்தளிக்கும் போதிலே
கலங்கரை விளக்காக
கடலோரம் நீன்று
கரம்நீட்டி அழைக்காமல்
கரைசேர இயலாது
உடலோடு மனமும்
தளர்ந்திடும் முதுமையில்
ஒருநாள் வாழ்வும்
யுகமாக இருக்கையில்
கணம்தோறும் உடன்வந்து
கண்வைத்து காக்காமல்
ஒருநாள் வாழ்வும்
உலகில் நகராது
இளமை, முதுமை
என்கிற நிலைகளை
இந்த உடலுக்கு
நீயுமே ஏன்வைத்தாய்
உடலே பாரமாய்
ஆகிடும் வண்ணம்
ஏனிந்த நியதியை
இயற்கையில் நீவைத்தாய்
இளமையில் தோன்றி
பலவிதக் கேள்விகள்
முதுமை வந்தும்
தன்போல் வருகுது
ஆயிரம் பதில்களை
உலகம் தரினும்
உள்ளம் அதனை
ஏற்றிட மறுக்குது
ஒருவேளை இதுபோல்
உன்னிடம் வந்து
உன்னுடன் பேசிட
கிடைக்கா சந்தர்பம்
கிடைத்திட வேண்டி
இந்த முதுமையை
நீயுமேத் தந்தாயோ
எதுவான போதும்
இந்த முதுமையை
காணும் வாய்ப்பை
நீயுமேத் தந்தாய்
ஆகவே எஞ்சிய
வாழ்வையும் உன்னில்
வாழ்ந்துமே முடிக்க
அருளினைத் தருவாய்
மத்திகிரி, 15-12-2019, இரவு 11.00