1160 unanswerable mistake
To the question:
Who is wrong?
Till the end
We cannot get the answer
To the question:
Which one is wrong
No one has given
The final answer
When we think
About others mistakes
Our own mistakes
Come and stand before us
When we think
Which one is wrong
We cannot find
A universal answer for all
If we hesitate
To correct others mistakes
Thinking about our own
Then we cannot correct others ever
If we began to seek
A common answer for all
Nothing will look
Mistake for us
We should try to
Correct others mistakes
By keeping our
Mistakes before us
We should measure
The mistakes
Considering the context of
Time, place and motive
We should keep
A balance
Keeping others
Welfare alone in our mind
Accepting our
Own mistakes
We should act
With much humility
Then we should
Help others
For them to
Come out from their mistakes
As there are so many
Complications in mistakes
We should approach mistake
Without any mistake
Mathigiri, 26-12-2019, 11.10 p.m.
Pluralism is a reality in life. The relative nature of ethics cannot be ruled out. In such scenario to the questions: who is wrong and which one is wrong, no one can find a normative answer for all. But when we help others to recognize their mistake and try to correct it, we should keep our own mistakes before us and approach others mistakes with some humility. At the same time refuse to correct others mistakes thinking that we are not perfect, then we cannot help others to come out from their mistakes. Accepting all the various limitation in approaching any mistake alone will help us to keep a balance in correcting others mistake. As I tried to help a young man to address his question about ‘addiction’, giving my short response I wrote this song. Later I gave a long response to him and after sending it I retired to bed very late in the night. See my article ‘Addiction’ for more on this subject.
1160 விடையில்லா தவறு
எவரின் தவறு
என்கிற கேள்விக்கு
இறுதி வரையில்
விடை கிடைக்காது
எதுதான் தவறு
என்கிற கேள்விக்கு
இதுவரை விடையை
தந்தவர் கிடையாது
பிறரின் தவறை
எண்ணிடும் போது
நமது தவறே
முன்வந்து நிற்குது
தவறு எதுவென
எண்ணிடும் போது
பொதுவான விடையும்
எப்போதும் கிடைக்காது
நமது தவரையே
எண்ணித் தயங்கினால்
பிறரின் தவறை
திருத்திட இயலாது
பொதுவான விடையை
தேடியே அலைந்தால்
ஏதுமே தவறாக
நமக்குமேத் தோன்றாது
நமது தவறையும்
கண்முன்னே நிறுத்தி
பிறரின் தவறை
திருத்திட்ட வேண்டும்
இடம், பொருள் காலம்
அனைத்தையும் ஏற்று
தவறு எதுவென
அளவிட வேண்டும்
பிறரின் நலனை
மனதில் கொண்டு
சமநிலை தன்னை
கைக்கொள்ள வேண்டும்
தனது தவறை
ஏற்றுமே கொண்டு
தாழ்மையுடனே
செயல்பட வேண்டும்
அதன்பின் பிறரின்
தவறை திருத்தி
அவரும் மீள
உதவிட வேண்டும்
தவறில் இத்தனை
அளவுகள் இருக்க
தவறின்றி தவறை
அணுகிட வேண்டும்
மத்திகிரி, 26-12-2019, இரவு, 11.10