Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 510

$
0
0

510 Unnecessary tasks

 

There are

Thousands of tasks

Which cannot be removed?

Which we don’t know how to give up

 

We voluntarily

Do thousands of things

Unnecessarily by

Paying a cost for it

 

We alone know

How do we do many things?

Only for

Others to appreciate

 

We become like the water

Which was irrigated to the weeds?

Without any use of anyone

And without having any connection to us

 

Not understanding on our own

Not listening when others give advice

We lament

Once we burnt our fingers

 

But completely

Forgetting it

Next second

We get ready to do the same

 

We give thousands of

Explanations to it

And we do it

Again and again

 

Finally we become

A burden to those who live with us

As we always live

With this nature

 

However try unable to

Get rid of this nature

Somehow we

Manage to live till the end

 

But we leave

A lesson for others

Not do the same

Like us

 

Finally we take

Some satisfaction that

At least there is

This one benefit because of us

 

Mathigiri, 6-5-2019, 11.45 p. m.

 

We often involve in some activities just to show how liberal or generous are we.  When it leads to unnecessary complication, unable to leave at the same time unable to involve further we get trapped.  In this those who are with us suffer more than us.  And to whom we do such generous service often take advantage of our weakness.  For many they cannot easily get rid of this nature even after get pounded repeatedly. The only good thing in it is that others around us can learn good lesson from such activities and spare themselves from them.

 

510 வேண்டாத வேலை

 

விடவும் முடியாது

விட்டிடத் தெரியாது

வீணான காரியம்

ஆயிரம் உள்ளன

 

வீம்புக்கு விலைபேசி

வேண்டாத விலைதந்து

ஆயிரம் காரியம்

நாமாகச் செய்கிறோம்

 

ஊர்மெச்ச வேண்டி

பிறர்காண வென்று

செய்வது எத்தனை

நாம்மட்டும் அறிவோம்

 

பிறர்க்கும் பயனின்றி

தனக்கும் தொடர்பின்றி

விழலுக்கு இரைத்த

நீராக்கிப் போகிறோம்

 

சொன்னாலும் கேட்காமல்

தன்னாலும் புரியாமல்

பட்டபின் புலம்பி

வீணாக அழுகின்றோம்

 

ஆனாலும் அதையே

அடியோடு மறந்து

அடுத்த நொடியிலே

அதையே செய்கின்றோம்

 

அதற்கான விளக்கம்

ஆயிரம் தந்துமே

அதையே மீண்டும்

பலமுறை செய்கிறோம்

 

இந்த குணம்கொண்டு

வாழ்ந்திடும் நாமுமே

நம்மோடு வாழ்வோர்க்கு

பாரமாய்ப் போகிறோம்

 

என்னதான் முயன்றாலும்

இக்குணம் மாறாமல்

இறுதி வறையிலே

வாழ்ந்து முடிக்கின்றோம்

 

நம்போல பிறறேதும்

செய்யாமல் இருந்து

நலமாக வாழ்ந்திட

வழிகாட்டிச் செல்கின்றோம்

 

இந்த பயெனொன்று

நம்மாலே உள்ளது

என்பதை எண்ணியே

நிம்மதி கொள்கிறோம்

 

மத்திகிரி, 6-5-2019, இரவு, 11.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles