1162 Nothing lacks
There is no
Shortcomings in my life
There is no shortage
In your love
Though small small
Troubles came in the body
There is no trouble
In my heart
There is no hesitation
For me to proclaim that
You are the
Reason for this
How many blessings
You have bestowed upon me
How much mercy
You had upon me
You upheld me
So far
Having compassion
As your bhakta
Though the
Years are running
Moving from days to weeks
And weeks as months
Your love
Remains the same
As yesterday to day
And forever
Immersing each
Moment in your love
Wetting your feet
With my tears
Telling that
This is enough; this is enough
I will sing
Remembering your compassion
Seeing a
Content life in you
I will live each day
Worshiping you
Mathigiri, 8-1-2020, 11.50 p.m.
Again I got severe back pain and unable to do even regular work. But as there is no alternative I managed doing works slowly. I didn’t tell about it to my mother not to make her to worry about my health. So when I sit for my meditation this night, I told the lord that in spite of small physical ailments (because of old age) he helps me to enjoy everyday life in him. As I began to think about it I wrote this song thanking and worshiping him.
1162 குறையில்லை
குறைஎன்ற ஒன்று
ஏதுமே இல்லை
நீகொண்ட அன்பிலே
குறையேதும் இல்லை
உடலிலே சிறுசிறு
துன்பங்கள் வந்தும்
உள்ளத்தில் எவ்வித
ஊனமும் இல்லை
இதற்குக் காரணம்
நீதான் என்று
சொல்லிட எவ்விதத்
தயக்கமும் இல்லை
எத்தனை எத்தனை
நன்மைகள் செய்தாய்
என்மீது எத்தனை
இரக்கமும் கொண்டாய்
பக்தன் என்று
பரிவுமே கொண்டு
பாங்குடன் என்னைத்
தாங்கியே வந்தாய்
நாட்கள் வாரம்
மாதமும் ஓட
வருடங்கள் எத்தனை
உருண்டிட்ட போதும்
நேற்று இன்று
நாளை என்றும்
நீகொண்ட அன்பு
மாறவே இல்லை
கணந்தோறும் உந்தன்
அன்பிலே திளைத்து
கண்ணீரும் வழிய
பாதத்தை நனைத்து
இதுபோதும் இதுபோதும்
என்றுமே கதைத்து
என்றுமே பாடுவேன்
கருணையை நினைந்து
நிறையுள்ள வாழ்வு
உன்னிலே கண்டு
கும்பிட்டு வாழ்வேன்
அனுதினம் பணிந்து
மத்திகிரி, 8-1-2020, இரவு, 11.50