520 I worn out
Reading many books
I become worn out
I wasted my days and time
Unnecessarily
I gave too much
Work to my brain
And earned the
Name as a fool
I don’t remember
All that I read so far
There is no use
Because of which I still remember
In order to
Kill the time
Somehow
I am reading books
Should I think that?
This is some sickness of mind
Or should I think that
This is essential in life?
Or should I ask
What is the use?
Because of
All the readings so far
As there are many
Unlearned wise men
And all those who learned
Remain lower to them
As I too read
Merely to gain information
I neither grew in my intellect
Nor I knew many things
No one ever
Gained anything
Because of
All my readings
Still I didn’t
Give up my reading
And I couldn’t find
The reason for this
As long as there are
Scholars to write
There is no hope
For me to stop reading
But I never give up
The hope that
One day this
Also will come to an end
Mathigiri, 24-10-2019, 11.00 p.m.
Already in one previous song I lamented my infatuation with reading. I know there is much benefit in reading and many people become very wise people because of their reading. But sometimes I feel that I become addicted to reading. Anyhow I think that it is a good addiction. As long as scholars are there to write I won’t stop reading books. Anyhow as there is some limitation even for the brain, I think one day I have to stop it and with this hope I continue to read.
520 நூலென இளைத்தேன்
நூல்பல படித்து
நூலென இளைத்தேன்
நேரத்தை காலத்தை
வீணிலே கழித்தேன்
மூளைக்கு அதிக
வேளையும் கொடுத்தேன்
மூடன் என்ற
பெயருமே எடுத்தேன்
படித்தது ஒன்றும்
நினைவிலே இல்லை
நினைவில் நின்றது
பயன்தர வில்லை
என்னவோ பொழுது
போயிட வென்று
ஏனோ நானும்
நூல்பல படித்தேன்
இதுஒரு மனநோய்
என்றுமே எண்ணவா
இல்லை அவசியம்
என்றுமே உணரவா
இதுவரை படித்து
அறிந்தவையாலே
கண்ட பயனெது
என்றுமே கேட்கவா
படிக்காத மேதைகள்
பாரினில் இருக்க
படித்தவர் பலருமே
அவரினும் தாழ்ந்திருக்க
அறிய வேண்டி
நானும் படிப்பதால்
அறிவிலும் வளரவில்லை
அதிகமாய் அறியவில்லை
இதுவரை நானும்
அறிந்தவையாலே
எவ்வித பயனும்
எவரும் பெறவில்லை
ஆயினும் நானும்
படிப்பதை விடவில்லை
அதற்கான காரணம்
கிடைக்க வில்லை
எழுதிட சான்றோர்
இருக்கின்றவரையிலும்
படிப்பதை நிறுத்திட
எனக்கும் வழியில்லை
என்றேனும் ஒருநாள்
இதுவும் நின்றிடும்
என்கின்ற நம்பிக்கை
மட்டும் விடவில்லை
மத்திகிரி, 24-10-2019, இரவு, 11.00