ஒன்றுமே பேசாது இருக்க வேண்டும்
உள்ளே ஒடுங்கியே கிடக்க வேண்டும்
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எண்ணங்களை
உள்ளுக்குள்ளே நானும் ஒடுக்க வேண்டும்
வேண்டாத பேச்சினை விட்டுவிட்டால்
வீணான எண்ணங்கள் நின்றுவிடும்
வீணான எண்ணங்கள் நின்றுவிட்டால்
ஓயாத கற்பனை வற்றிவிடும்
சின்னஞ் சிறிய தழல் கொண்டுமே
பெருந்தீயை எளிதாக எழுப்பிடலாம்
தேவையற்ற கற்பனையால்
சிறகடித்து வானத்தில் பறந்திடலாம்
ஊதி ஊதி பெரிதாக்கிட
சிறுவாதம் பெரிதாக வளர்ந்திடுமே
தேவையில்லாமல் ஆரம்பிக்க
முடியாத போராட்டம் வளர்ந்திடுமே
எண்ணத்தை எண்ணத்தால் வென்றிடனும்
இதற்கான பயிற்சியை நாம் பெறனும்
என்னாலே முடியாது என்று சொல்ல
இறுதியில் தோல்வியை சந்திக்கனும்
மத்திகிரி, 11-11-16, இரவு, 11.10