Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1176

$
0
0

1176 Good shepherd

 

I accomplished

What you taught me

I will try my best

What you will teach me

 

I realized

Clearly that

Without your strength

Both are not possible

 

However difficult

The task is

As you are teaching

Properly

 

Accomplishing becomes

Very easy for me

Along with it

I gain more and more strength

 

Do I need to?

Tell you that

You have to drive

The pregnant sheep gently

 

Do I need to tell you?

Who always remains a good shepherd?

How you have to

Take me for grazing

 

You will take me

To the green pastures

In proper time

You will take me to the water

 

Allowing me to take

Rest in the shadow

Again you will

Take me for grazing

 

I should remain

The sheep of your fold

You should lead me

By the hand of your stick

 

Becoming the

Sheep which you hug

I should remain

Always with you

 

Mathigiri, 20-2-2020, 11.50 p.m.

 

As I was meditating the way the Lord leads me each moment of my life very carefully I wrote this song.

 

1176 நல் மேய்ப்பன்

 

சொல்லித் தந்ததை

செய்துமே முடித்தேன்

சொல்லித் தருவதை

முயன்றுமே பார்ப்பேன்

 

உன்பெலன் அன்றி

இரண்டுமே இயலாது

என்பதைக் கூட

நன்குமே புரிந்தேன்

 

எத்தனைக் கடினமாய்

இருந்திடும் போதிலும்

ஏற்ற விதத்தில்நீ

சொல்லியேத் தருவதால்

 

செய்வதும் இலகுவாய்

மாறியே போகுது

தெம்பும் மென்மேலும்

பெறுகியே கூடுது

 

சினையாடு அதனை

மெதுவாக ஒட்டணும்

என்பதை உனக்கு

சொல்லியாத் தரணும்

 

மேய்ப்பனாய் என்றும்

இருந்திடும் உனக்கு

எப்படி மேய்க்கணும்

என்றுமா சொல்லணும்

 

மேச்சல் நிலம்பார்த்து

நீயுமே ஒட்டுவாய்

ஏற்ற நேரத்தில்

நீரிடம் சேர்ப்பாய்

 

நிழலிலே இளைப்பாறி

மீண்டுமே மேய்ப்பாய்

நிரம்பிய வயிற்றோடு

வீட்டிலே சேர்ப்பாய்

 

உன்மந்தை ஆடாக

இருந்திட வேண்டும்

உன்கை கோலாலே

நடத்திட்ட வேண்டும்

 

உன்கை அணைக்கும்

ஆடாக மாறி

உன்னுடன் என்றும்

இருந்திட வேண்டும்

 

மத்திகிரி, 20-2-2020, இரவு, 11.50


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles