நல்லவிதமாக நேரத்தைப் போக்கிட
நமக்கும் உள்ளது நல்லவழி பல
தேவை இல்லாத சிந்தையை போக்கி
தேடலாம் இறைவனை அவனருள் நாடி
வேண்டாத பலவாதம் நாள்தோறும் இருக்க
அத்துடன் பிடிவாதம் சேர்ந்து கொள்ள
ஆயிரம் தர்க்கங்கள் அவற்றுடன் செய்ய
அமைதியை இழப்போமே மனதினுள் மெள்ள
வாதித்தால் எதிர்வாதம் நிச்சயம் வந்திடும்
அதனால் பிடிவாதம் இன்னும் பெருகிடும்
எதிர்வாதம், பிடிவாதம் வீண்வாதம் வளர்த்திடும்
வேண்டாத தர்க்கங்கள் ஆயிரம் பிறந்திடும்
இதற்கென சிந்தையை இறைவனும் தந்தானா
இதுபோன்று நேரத்தை செலவிடச் சொன்னானா
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் செய்ய
அவனே பலவழி காட்டிட மறுத்தானா
அவன்னடி சென்று அமர்ந்தே பார்ப்போம்
அவன்சொல்லும் வார்த்தையை அமைதியாய்க் கேட்போம்
அதற்கென நேரம் அவன் தரும் போது
அதைவிட்டு வீண்சிந்தை செய்யாதிருப்போம்
இதைச்செயத் தவறி இழந்தது அதிகம்
இறையடி அண்டினால் பெறுவது அதிகம்
உணர்ந்து திருந்திட அமைதி பெருகும்
உணர் மறுபது அவர்ரவர் விருப்பம்
மத்திகிரி, 28-10-16, காலை, 6.00