This is also good [For Original Tamil see at the end of the article]
It is the duty of the Hindus to preserve the statue of Periyar (E.V. Ramaswamy Nayakar)
The statements under the statue of Periyar are against Muslims and Christians and Hindus.
1 ‘There is no God’ (by Periyar)—When a Hindu reads he is outraged because but not for others (Muslims and Christians). Because what we (Hindu) worship alone God.
2 ‘Those who taught God are fools’(by Periyar)– Mohammad came as the Prophet and taught God. Jesus Christ came as song of God and taught God. But there is no one in Hinduism who taught God. Therefore Periyar only calls both Mohammad and Christ as fools.
3 ‘Those who propagated (God) is a scoundrel’—Only other religions (Islam and Christianity ) alone were propagated. So Periyar only talks about those who propagated those religions. Our religion was never propagated by any one.
4 Why they keep Periyar statue only before (Hindu) temples alone?
EVR is the enemy of God. Therefore he can oppose only where there is God. As God is only in the (Hindu) temple.
5 As God is not either in the Mosque or Church. How one can oppose (God) where there is no God?
Thanks to Shri Sukumar Ramachandra Sir healthy Bharath.
Thanks
Kumbha Kameshbabu.
This is my response:
Temple politics
The above posting is what is called as putting same side goal (or doing sorcery on oneself at personal cost) Mocking other faiths using Periyar only demonstrates only our ignorance. In general a sincere Hindu won’t mock other Faiths. Similarly when others talk ill about her faith, she will ignore it.
Though Christians call their church as temple (in Tamilnadu) actually it is not a temple. In fact according to their Bible God never dwells in any man made structure. The Bible says that ‘where two or three believers (bhaktas) gather together God dwells among them’. Actually their gathering is called ‘congregation’ (sabai in Tamil). To gather they construct some structure. In several places they gather even in open space. So when the Christians gather to worship and go way, and then God won’t dwell in that place. Their church is not constructed as we construct our temple following the rules of the rules of Agamas for god to dwell there permanently.
When they consecrate their church it is not done as we are doing our temples. It is called ‘Holy Unto God’, separating a place or things for the service of god. Even the ‘statues’ those are kept in the Catholic churches are only called ‘icons’. They are not worshiped but only shown respect or venerated. Even if we Hindus consider them as ‘murthy’ (Image), still they are not what called as ‘archavaratara’ (in Vaishnavism). That is why unlike as we do in our temples they need to do puja three times in a day to them.
So when their structure called church remain closed they never think that the ‘icons’ in them lose their ‘power’ unless proper pujas are done as per some ritual rules (Agamas). For example in this corona pandemic when their church remains closed they never both about it. Whereas even devotees are not allowed inside our temples, proper pujas need to be done in our temple as per the agamic rules. This we can understand from a different perspective. Some deities in some temples become famous as they are considered as powerful (Saktivaida daivam in Tamil). Because more the pujas were done as per the agamic rules, that particular deity gains more power. To say in other words our pujas can enhance the power in a particular deity. 1 But no such concept exists among the Christians towards their ‘icons’ in side their churches or in the road side shrines that to ‘energise’ them proper pujas needs to be done.
Similarly claiming that only people of other faiths are propagating their religion and we Hindus are not doing it is a lie. Each sampradaya is propagating its faith and converting people of other faiths to their sampradayas. Saivites becoming Vaishnavites and Vaishnavites becoming Saivites is quite common. There are ample evidence in Periyapuranam by Sekizhar how both Jains and Buddhists were won in debate and reconverted to Saivism or palled in a sharp pole known as ‘kazhavetrudual in Tamil when they refuse to convert. Periyapuranam clearly states that the Thiru Jnana Sambandar took avatara only to eradicate Jains and Buddhist from Tamilnadu and restore back Saivism.
We need not think that this happened back in history and not now. Though Hindus never convert people of other faiths to Hinduism except ISCON and few other sects, we often hear about one Hindu promoting her personal guru to another Hindu and recommend others to come and worship in a particular temple to get special favour. Of course this never comes under the orbit of conversion but one Hindu promoting her particular faith to another is not unknown even today.
Not only in India, almost everywhere in the world temples (also church or mosque) is constructed neither for spirituality nor for god but only for political and economic reasons2 or for personal fame. There are ample historical and epigraphic evidence. Particularly in the historical period kings constructed temples to expand their political power and economic reasons. Both Michael Willis3 (The Archaeology of Hindu Ritual: Temples and the establishment of the Gods, Cambridge, 2009) and Vijay Nath, (Puraanas and Acculturation: A Historico-Anthropological Perspective, Munshirma Manoharlal, New Delhi, 2001) demonstrate this clearly. Champakalakshmi gives details records about this in South India in her book: Religion, Tradition, and Ideology: Pre-colonial South India, Oxford, New Delhi (2011), 2012. And the Bible Background Commentary (John H. Walton; Victor H. Matthews & Mark W. Chavalas, The IVP Bible Background Commentary, Old Testament, Downers Grove, Illinois, 2000) speaks about the temple was the center of culture, economy and society in Syria, Mesopotamia and Israel (2 CHRONICLES, p.445).
Even the National poet Subramanya Bharatiyar4 says that:
Creating tree garden of sweet fruits Digging fountains of sweet water Arranging charitable homes for free meals Constructing thousands of temples And all other such charities are Only to glorify one’s own name But helping a poor child to get education Is the best charity which will earn better merit! (a free translation by me)
Therefore keeping Periyar as a pretext criticizing sarcastically criticising other faiths Is not demonstrating our maturity or knowledge about their religion.
Dayanand Bharati 4-08-2020
1 Energising deities in order to receive more benefit from them is not limited only with Hinduism. For example in Shinto sect in Japan every year a particular ritual is performed to energize the deity of that sect. (I watched this program in BBC Earth on 8-08-202)
2….gifting to the temple and its functionaries was an act of merit that was inevitably recorded and eulogized in the inscriptions. However, the underlying motive was to gain the greatest possible access to the temple and be a part of the ceremonial framework that included other social groups over which the rayas and chiefs wanted to assert control. The temple and its functionaries were instrumental in legitimizing their benefactors ’ political authority….— Ranjeeta Dutta, From Hagiographies to Biographies: Ramanuja in Tradition and History, New Delhi, Oxford University Press, 2014,p. 102
…the temple was also a statement of political authority when built by a ruler.— Romila Thapar, Syndicated Hinduism Critical Quest, New Delhi, 2010. [Originally published in Gunther-Dietz Sontheimer & Herman Kulke edited Hinduism Revisted, Delhi, Manohar (2005). p. 14
…Unlike the setting up of inscriptions, the building of temple commanded greater respect and was symbolically better privileged in the race for vertical political mobility. The catalytic role it played in marshalling popular support and gaining greater access to resources through the new temple-centered redistributive machinery can hardly be overstated.— Manu V. Devadevan, A Prehistory of Hinduism, Berlin, De Gruyter Open Ltd, 2016, p. 39
3 Note the following reference given by Wills to substantiate this point: “Throne and Temple: Political Power and Religious Prestige in Vidarbha.” In The Sacred Centre as a Focus of Political Interest. Edited by Hans T. Bakker, Gronlingen, 1992 |
4 இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர் தண் சுணைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத் தறிவித்தல்.
–அதாவது ஆலயம் கட்டுதல் உட்பட செய்யப்பட்டும் பல தருமங்களும் ‘தன்னுடைய பெயர் விளங்கி ஒளிர நிறுத்த வேண்டி’ என்று தெளிவாகக் கூறுகிறார். பல அரசர்களும் இதைத்தான் செய்தார்கள்.
@@ அட, இதுகூட நல்லாத்தான் இருக்கு… @@
படித்ததில் மிகப் பிடித்தது:
ஈவெராவின் சிலையைப் பாதுகாப்பது இந்துவின் கடமை!
ஈவெராவின் சிலைக்குக் கீழ் இருக்கும் வாசகம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரானது. இந்துவுக்கு அல்ல.
கடவுள் இல்லை. இல்லவே இல்லை–அர்த்தம்: இதனைப் படித்தால் இந்துவுக்குக் கோபம் வருகிறது. மற்ற மதத்தவர்களுக்கு வருவதில்லை. காரணம் நாம் வணங்குவதுதான் கடவுள்.
2. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்–இறை தூதராக வந்து நபி கடவுளைக் கற்பித்தார். தேவகுமாரனாக வந்து ஏசு கற்பித்தார். அவர்கள் இருவரையும்தான் ஈவெரா முட்டாள் என்று சிலையின் கீழ் சொல்லியுள்ளார். இந்து மதத்தில் கற்பித்தவர் இல்லை.
3. பரப்பியவன் அயோக்கியன்–மாற்று மதங்கள்தான் பரப்பப்பட்டது. நம் நாட்டிற்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களைக் கொண்டு வந்து பரப்பியவர்களைத்தான் அந்த சிலைக்கு கீழ் ஈவெரா சொல்லியுள்ளார். நம் மதம் யாராலும் பரப்பப்பட்டது இல்லை.
4. கோயில்களுக்கு முன்பு மட்டும் ஈவெரா சிலை வைப்பது ஏன்? ஈவெரா கடவுளின் எதிரி. அவர் கடவுள் இருக்கும் இடத்தில்தான் சென்று எதிர்க்க முடியும். கோயிலில் கடவுள் இருப்பதால் அங்கு சிலை வைத்து எதிர்க்கிறார்கள்.
மசூதியிலோ, சர்ச்சிலோ கடவுள் இல்லை. இல்லாத இடத்தில் எப்படி எதிர்ப்பது? அதனால்தான் அங்கு அவர் சிலையை வைப்பதில்லை. அறிவாலயத்தில் இவரை மதிப்பவர் எவரும் இல்லை.
Thanks to Shri Sukumar Ramachandran Sir and Healthy Bharath.
நன்றி : Kumbha Rameshbabu. |
கோயில் அரசியல்
இதைத்தான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது. பெரியார் மூலம் பிறமத்தினரை கேலிசெய்வது அவர்களின் மதக் கோட்பாடுகள் பற்றி நமக்குள்ள அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
பெரும்பாலும் ஒரு உண்மையான இந்து பிற மததினரையும் அவர்களின் கோட்பாடுகளையும் அவமதிப்பதில்லை. பிறமதத்தினர் நம்மைப்பற்றி அறியாமையால் கூறும் எதையும் நாம் பொருட்படுத்துவதும் இல்லை.
உதாரணமாக நமது ஆலயங்களில் உள்ளதுபோல கிறிஸ்தவ ஆலயம் என்று கூறும் அவர்களது திருச்சபைக் கட்டிடங்களில் இறைவன் வாசமாய் இருப்பது இல்லை. அது கோயிலும் இல்லை இறைவன் வாழும் ஆலயமும் இல்லை. அவர்களின் மறையின் படி எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் இறைவனின் பெயரில் கூடி வழிபடுகின்றார்களோ அங்கே அவர்களின் மத்தியில் தான் இருப்பதாகத்தான் இறைவன் கூறுகின்றான். ஆகவே கிறிஸ்தவர்கள் கூடி வழிபாடு செய்து களைந்து சென்றபின்பு அந்தக் கட்டிடத்தில் நமது ஆலயங்களில் உள்ளது போல் இறைவன் வாசம் செய்வது இல்லை.
அவர்கள் தங்கள் ஆலயத்தை ‘பிரதிஷ்டை’ செய்வது என்பது நமது ஆலயங்களை ஆகம விதிப்படி செய்வதுபோல் செய்வது இல்லை. அதற்கு ‘பரிசுத்தப்படுத்தல்’ என்று பெயர். அதாவது ஒரு இடத்தை, பொருளை இறைவனின் சேவைக்காக தனியாகப் பிரித்து வைப்பது என்பது மட்டும்தான் அதன் பொருள். இன்னும் சொல்லப்போனால் ரோமன் கத்தோலிக்க கட்டிடங்களில் உள்ள மேரி, இயேசு, மாற்றும் உள்ள பிற அடியார்களின் சிலைகள் இறைவனின் திருமேனி அல்ல. அவை வெறும் சொரூபங்கள் மட்டுமே. அவைகள் சிலை கூட இல்லை.
அவைகள் நமது ஆகம விதிகளின்படி அமைக்கப்படாததால் அவற்றுக்கு நமது ஆலயங்களில் உள்ளது போல் மூன்று வேளையும் பூஜை நடத்தப்படுவதில்லை. உதாரணமாக இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் கோவில்களுக்கு வருவது தடை செய்யப்பட்டாலும், கோயில்களில் அர்ச்சர்கள் கோயிலைத் திறந்து மூன்று
வேளைகளிலும் பூஜை செய்வது அனும்மதிக்கப்பட்டுள்ளது. இதை வேறு விதத்திலும் நாம் புரிந்து கொள்ளலாம். சில கோயில்களில் உள்ள தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருத்தப்படுகிறது. காரணம் அவ்வற்றுக்கு பலகாலம் ஆகமம் மற்றும் தாந்திர முறைகளின் படி பூஜைகள் பல
காலங்ககள் செய்து அவற்றுக்கு அதிக சக்தி வரும்படி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களில் உள்ள சிலைகளுக்கு இதுபோன்ற
சக்தி பூஜை செய்வதினால் வருவதில்லை. ஆனால் வேளாங்கண்ணி மாதா கோயில் போன்ற சில கத்தோலிக்க ஆலயங்கள் நமது இந்து கோயில்களைப் பின்பற்றி இது போன்று பிரசித்தி பெற்றுவிட்டது. அதில் முக்கியப் பங்கு இந்துக்களுக்கும் உண்டு.
அதுபோல் பிறமத்தினர் மட்டும்தான் தங்களின் மதக் கொள்கைகளை பரப்புவதாகவும் நாம் இந்துக்கள் அவ்வாறு செய்வது இல்லை என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். சைவர்கள் வைணவர்கள் ஆனதும், வைணவர்கள் சைவர்கள் ஆனதும்; சமண புத்த மத்தினரை வாதத்தில் வென்று அவர்களை சைவர்களாக மாற்றியத்தையும், அவர்களின் பள்ளிகளை இடித்து கோயில் கட்டியத்தைப் பற்றியும் மிகவும் தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பெரிய புராணத்தை படித்தால் இது மிகத் தெளிவாகப் புரியும். சமணராக இருந்து சைவராக மாறிய அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். திருஞான சம்பந்தரின் திரு அவதார நோக்கமே சமணத்தையும் புத்தமதத்தையும் வேறறுத்து மீண்டும் சைவத்தை தமிழகத்தில் நிலை நிறுத்துவதற்காக என்று பெரிய புராணம் தெளிவாகக் கூறுகின்றது.
இது ஏதோ பண்டைக்காலத்தில் நடந்ததாக நாம் நினைக்க வேண்டாம். இன்றும் ஒரு தெய்வத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட கோயிலை வழிபாடுபவர்கள் அதன் மகத்துவத்தைக் கூறி மற்றவர்களையும் அதைப் பின்பற்றச் செய்வது நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் பிறமதத்தினர் கூறுவது போல் அந்த தெய்வத்தை மட்டுமே வழிபடவேண்டும் என்று நாம் கூறுவது கிடையாது. ஆனால் சில அதி தீவிர நம்பிக்கையாளர்கள் தங்கள் தெய்வத்தை மட்டுமே வழிபட வேண்டும் என்றும், தங்கள் குருவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுவது உண்டு.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எல்லா இடங்களிலும் பெரும்பாலான கோயில்களை ஆண்டவனுக்காகவோ அல்லது ஆன்மீகத்திற்காகவோ கட்டவில்லை. கோயில்களின்பின் அரசியல், ஆதாயம் (பொருளாதாரம்), அல்லது புகழ் மட்டுமே முக்கியமாக உள்ளது. இன்றும் பெரும்பாலும் கோயிகளில் உள்ள அரசியல், ஆதாயம் அல்லது உள்ளூர் பிரச்சைனைகள் பற்றி நமக்கு நன்கு தெரியும். இது பற்றிய தெளிவான வரலாற்றுக் குறிப்புகளும், கல்வெட்டுகளும் உள்ளன. அவற்றையெல்லாம் ஆதாரமாக இங்கு தர முயன்றால் அது ஒரு புத்கமாகவே மாறிவிடும். நமது சமகாலத்தில் வாழ்ந்த பாரதியாரே இது பற்றி கூறுகையில்:
இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர் தண் சுணைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத் தறிவித்தல்.
–அதாவது ஆலயம் கட்டுதல் உட்பட செய்யப்பட்டும் பல தருமங்களும் ‘தன்னுடைய பெயர் விளங்கி ஒளிர நிறுத்த வேண்டி’ என்று தெளிவாகக் கூறுகிறார். பல அரசர்களும் இதைத்தான் செய்தார்கள்.
எனவே பெரியாரை சாக்காக வைத்துக் கொண்டு சில சரித்திர சான்றுகள் மற்றும் நடமுறை உண்மைகளை அறியாமல் பிறமத்தினரை கேலி செய்வது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்குச் சமம். எனவே இதுகூட நல்லாத்தான் இருக்கு என்று சொல்வதைக் காட்டிலும் ‘இதுவும் கூட சரியில்லை’ என்பதுதான் சரியாக இருக்கும்
தயானந்த பாரதி
4-08-2020