The next two songs were written based on two famous songs sung by Bharat Ratna, the late Srimati M. S. Subbulakshmi.
இப்பாடலும் அடுத்த பாடலும் திருமதி. எம். எஸ். சுப்புலஷ்மி பாடிய இரண்டு பிரபலமான பாடல்களைத் தழுவி எழுதியது. அடிப்படைவாதிகள் இதை எதிர்க்களாம். ஆனால் என்போன்ற இந்து முக்தேசன் பக்கதர்களுக்கு அப்படிப்பட்ட உரிமை உள்ளது:
குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை மறைகூறும் இறைவா
குறை ஒன்றும் இல்லை ஸ்வாமி எனக்கு
எனக்கு குறை ஒன்றும் இல்லை ஐயா…
புலனுக்குப் புறம்பாக நிற்கின்ற போதும்
புனிதனே உன்னருள் எனக்கென்றும் வேண்டும்–குறை ஒன்றும்….
வேண்டிடும் நலம் யாவும் நிறைவாய் அருள்வாய்
வேண்டாத குணம்போக்க அருளும் தருவாய்–குறை ஒன்றும்…
தேவா அருள் நாதா
இறைவா என் தலைவா….
11-05-1994.
English Translation
Nothing I lack O God who is portrayed by Veda
Nothing I lack
Even though you stand outside my senses
O holy one I need your grace
You will bestow all the benefits to me
And will give grace to remove unneeded gunas from me
O Lord, graceful One
My God and my Master…
11-05-1994