முடியாத மன்றாடல்
‘மன்னியும் ஐயா’ என மன்றாட முடியாத
மாபெரும் பாவியானேன்
மனதாலே செய்த பிழை பலவாகி அதனாலே
மீளாத பழிக்கும் ஆனேன்
எவ்வளவோ முறை என்னென்ன தீர்மானம்
எடுத்துமோர் பயனும் காணேன்
ஏனிங்கு என்வாழ்வில் இவ்வளவு தோல்விகள்
இதற்குமோர் விடையும் காணேன்
சோதனை பலவாகத் தாக்கிடும் போதிலே
செயலற்று நின்று போனேன்
சொல்லினில் கூறிட இயலாத நிலையில்
சோர்வினால் தளர்ந்து போனேன்
பலவீனம் அதன்மீது பழிகூறி பலமுறை
பாவத்திலே உழன்றேன் நானும்
பரிகாரம் நீயன்றி வேறெங்கும் காணாமல்
பதறியே வந்தேன் மீண்டும்
கொண்டாலும் தள்ளினும் கோவே உன்னருளன்றி
குணம்காண வழியும் காணேன்
அன்றென்னை ஆட்கொண்ட அருளுண்டு உன்னிடம்
அதனாலே வந்து நின்றேன்
புலம்பிடும் புலையனின் பிழைதனைப் பொறுத்திடு
புனிதனே உன்னிடம் சரணடைந்தேன்.
13-09-1994. பெங்களூரு.
English Translation
I become the worst sinner
Who cannot even seek forgiveness from you
As the errors that I have done through my heart have become manifold
I have become un-redeemably blameable
Though many times I made several decisions
I don’t find any use in them
Why are there so many failures in life
I don’t find answer for this
As many temptations attack me
I have become completely still
As I cannot utter this condition
I have become very weak because of depression
Blaming my weakness many times
I indulged in sin
As I cannot find any other remedy
I came unto you with much panic
If you accept me or reject, O King without your grace
I don’t find any other means to be healed
I come unto you
As you have the same grace which redeemed in the past
Forgive the mistakes of this mean one who laments
Oh Holy One I take refuge unto you.
13-09-1994. Bengaluru.
Comments
I define anything that separates me from my Lord as sin. The cruelty of sin is that it affects the person more than others. It paralyzes the entire person and it takes time to come out from that condition. Though one can feel the forgiveness of God and receive His grace to heal and restore her, it takes time to come back to normal life—particular with spiritual activity related to sadhana. I have stopped reading Muktiveda and praying when I underwent such a situation in my life. Of course my only consolation is the way I could pour out my heart through some of my poems that I either write on that occasion or recall an old one.
The spirit of this song cannot be understood well in the English translation.
14-7-14