Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1231

$
0
0

1231 What is silence?

 

However I remain

Quiet by shutting my mouth

Still the silence

Has not come within me

 

When my mind

Is talking with me

I cannot understand

What silence is?

 

With the help of buddhi

Control the mind

Those who overcome mind

Told this to me

 

Not knowing which is mind

And which is buddhi

I went and

Asked about it to them

 

Unable to understand

All their explanations

I keep quite

Silently again

 

Not knowing

Which is body and which is mind?

And which is buddhi and which is atman

I am confused

 

Without body there is no atman/breath

Without atman/breath there is no body

There is no name

For the sense which moves within

 

How many names

We use to call them

There is no way to say that

This is ‘buddhi’ and this is ‘mind’

 

Once as I clearly

Understood about me

There is no need

To search about it further

 

So whatever

Silent might be

There is no use

In talking about it

 

Mathigiri, 27-08-2020,11.00 p.m.

 

Again the question ‘what is silence’ came when I read any thought about it.  Though every philosophical/theological tradition tries to separate human psyche in various parts with various terms, ultimately for me we are un-dived whole or undividable whole.  The best and only answer to understand and explain silence is to remain silent.

 

1231 எது மவுனம்

 

என்னதான் வாய்மூடி

நானுமே இருந்தாலும்

என்னுளே மவுனம்

வந்திட வில்லை

 

என்மனம் என்னுடன்

பேசிடும் போது

மவுனம் எதுவெனப்

புரியவும் இல்லை

 

அறிவைக் கொண்டு

மனதினை அடக்கு

என்று என்னிடம்

வென்றவர் சொன்னார்

 

அறிவெது மனமெது

என்பது புரியாமல்

அவரிடம் சென்று

அதனையும் கேட்டேன்

 

அவர்கூறும் விளக்கம்

ஏதுமே புரியாமல்

அமைதியாய் நானும்

வாய்மூடிக் கொண்டேன்

 

உடலெது மனமெது

அறிவெது உயிரெது

என்பது தெரியாமல்

குழம்பியேத் தவிக்க

 

உடலின்றி உயிரில்லை

உயிரின்றி உடலில்லை

உள்ளாக இயங்கிடும்

உணர்வுக்குப் பெயரில்லை

 

எத்தனைப் பெயரிட்டு

நாமுமே அழைத்தாலும்

அறிவென்று மனமென்று

கூறிட வழியில்லை

 

இத்தனைத் தெளிவாக

என்னையே புரிந்தபின்

இதற்குமேல் ஆராயத்

தேவை எனக்கில்லை

 

ஆகவே மவுனம்

எதுவாக இருந்தாலும்

அதைப்பற்றி சொல்வதால்

பயனேதும் இல்லை

 

மத்திகிரி, 27-08-2020, இரவு, 11.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles