554 Those that come and go
There are several people
In our live
Who will come in the middle?
And who will go in the same way
If we realize that
As there is none
Who will be with us?
Till the end
Welcoming those who come and
Blessing those who depart
Let us continue our life
Which we already began
In this race
That goes forever
We too joining
With it
We too run
Our own race
And doing
Our part also
Understanding that
We too are one among them
Those who come and go
In the middle of life
Like the stream
That joins
In the river
In the middle
Though people change
As they come and go
And this unchanging life
In this world
How many changes
It might have seen
It won’t change.
Realizing this
Only worshipping God
Who alone
Will be with us
Till in the end
Let us complete
His job
Which He gave us
For us to accomplish
13/09/2020, Mathigiri, 11.00 p.m.
Another son depicting the reality of life!
554 வருவார் போவார்
இடையினில் வந்து
இடையினில் போகும்
எத்தனையோ பேர்
நம்வாழ்வில் உள்ளார்
இறுதி வரையில்
ஊள்ளவர் எவரும்
இல்லை என்பதை
நாமுமே உணர்ந்தால்
வந்தால் ஏற்று
சென்றால் வாழ்த்தி
தொடங்கிய நமது
பயணத்தைத் தொடர்ந்து
இடைவிடாமல்
நடந்திடும் இந்த
உலக ஓட்டத்தில்
நாமும் இணைந்து
நமது ஓட்டத்தை
நாமும் ஓடி
நமது பங்கை
நன்குமே செய்து
இடையில் வருவோர்
போவோர் கூட்டத்தில்
நாமும் ஒருவர்
என்பதை உணர்ந்து
தொடர்ந்த நதியில்
ஓடும் நீருள்
இடையில் சேரும்
நீராய்க் கலந்து
வருவோர் போவோர்
மாறிய போதும்
மாறா இந்த
உலக வாழ்வு
மாற்றம் எத்தனைக்
கண்ட போதும்
மாறா தென்பதை
நான்கு உண்ர்ந்து
இறுதி வரையில்
நம்முடன் இருக்கும்
இறைவனை மட்டும்
என்றும் பணிந்து
இந்தப் பேற்றை
நமக்குத் தந்த
அவனது பணியை
நாமும் முடிப்போம்