Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1232

$
0
0

1232 Should keep silence

My mind is telling
Something to me
My heart is
Listening it carefully
The buddhi is then
Analyzing it
My atman is
Watching all this thamasa

Once all these words
Have defined me
Finally not knowing
Who am I?
Searching an answer
For this
I wandered everywhere
Not finding proper answer

As proper word is
Not available in Tamil
Definitely there will be
An answer in other languages
As I searched
For those words
In other languages
I was disappointed

Finally I came
To one conclusion
Then I found
Proper answer for that
Why should I ask?
Even this question
Then in vain
Search for the answer

I should stop
Asking questions
I should know first
Who is the one asking this question?
Definitely not the buddhi
This I should know for sure
Once it is known that
It is not mind or heart
Or even atman

Knowing that
As no one asked
Such question and
However anyone try
In whichever way
As they cannot give
Any kind of answer
I should live in silence

Mathigiri, 30-08-2020, 10.45 p.m.

All the writing about the body, mind, soul and spirit (atman) looks very artificial to me. When various words are used to define and explain them, ultimately who am I? Who is even asking this question? Is it my atman, mind, buddhi or ego? Which language will define the faculties clearly and correctly and give proper answer? Finally I come to the conclusion that no one can give a clear answer in any language for this question. The best solution is to stop even asking such questions and try to live in silence—transcending even words.

1232 மவுனம் காக்கணும்

என்மனம் என்னிடம்
எதையேனும் சொல்லுது
எனுள்ளம் அதையுமே
கவனமாய்க் கேட்குது
அறிவுமோ அதையுமே
ஆராய்ச்சி செய்யுது
இதையெலாம் ஆன்மா
வேடிக்கைப் பார்க்குது

இத்தனை வார்த்தைகள்
என்னையே வகுத்தபின்
இறுதியில் நான்
யாரெனத் தெரியாது
இதற்கொரு சரியான
விடைதேடி நானுமே
எங்கெங்கோ அலைந்தேன்
பதிலுமே கிடைக்காமல்

தமிழுக்குத் தெரியாத
விடையொன்று நிச்சயம்
பிறமொழியில் இருக்கும்
என்றுமே எண்ணியே
அவற்றில் இதற்கான
விடைதேடிப் பார்த்துமே
அங்கேயும் காணாமல்
ஏமாற்றம் அடைந்தேன்

இறுதியில் நானொரு
முடிவுக்கு வந்தேன்
அதன்பின் அதற்கான
பதிலையும் கண்டேன்
எதற்காக இந்தக்
கேள்வியைக் கேட்கணும்
அதன்பின் விடைதேடி
வீணாக அலையணும்

கேள்விகள் கேட்பதை
முதலிலே நிறுத்தணும்
கேட்பது யாரென
நிச்சயம் அறியணும்
அறிவல்ல உயிரல்ல
மனமல்ல உளமல்ல
என்பது நிச்சயம்
என்றுமே ஆனபின்

யாருமே கேட்காத
இந்தயென் கேள்விக்கு
எப்படி முயன்றாலும்
எங்குமே எவருமே
விடைத்தர இயலாது
என்பதை உணர்ந்து
வாய்மூடி நானும்
மவுனமாய் வாழணும்

மத்திகிரி, 30-08-2020, இரவு, 10.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles