1243 Adjust
How long this tussle
That goes between
You and me
Will continue
As both of us
Are not ready adjust
When there will be
Any solution to this
To all the questions:
‘Who began and
Why it is
Still continue’
We both
Refuse to give
The answer
So far
But who is
More affected by it
You give the answer
Only to this question
Then the answer
To other questions
Will automatically
Will come
I don’t know even
So far
How many questions
I have asked
But I can count
With my fingers
About all the answer
That you gave
Like the fish
That tries to escape while washing*
Why you refuse
To give answer
But you better
Change the thought that
There is no obligation
For you to do that
What is the need?
For me to say that
As the creator
You have the responsibility for that
Think the reason
That I have come
Even to remind this
Often to you
As you know
Well that
Adjusting is
Not in my nature
Adjusting
One more time
You find the means
To bring an end to this tussle
Mathigiri, 11-10-2020, 10.45 p.m.
Another tussle between God and me. He insists His sovereign will and I insist my right as a bhakta. At the end knowing my nature unless He gives some concession, there won’t be any end to this tussle. The word ‘Vittukkodu’ in Tamil means giving one’s right in order to maintain peace. Though I translated it as ‘adjust’, I am not sure whether this translation will communicate the original meaning in Tamil. In general the strong person or the correct person knowing the nature of the weak person gives up his or her right with magnanimity in order to maintain peace and cordial relationship is one major meaning of this Tamil word.
*This is a Tamil proverb depicting the one tries to escape from her responsibility.
1243 விட்டுக் கொடு
எனக்கும் உனக்கும்
இடையில் நடக்கும்
இந்தப் போராட்டம்
எதுவரை செல்லும்
விட்டுக் கொடுக்க
இருவரும் மறுக்க
எப்போது இதற்கு
தீர்வு கிடைக்கும்
தொடங்கி வைத்தது
யாரெனெத் தொடங்கி
தொடர்ந்து நடப்பது
ஏனென்ற வரையில்
உள்ள அனைத்து
கேள்வி களுக்கு
இருவரும் இதுவரை
பதில்தர மறுத்தோம்
ஆயினும் அதிக
பாதிப்பு யாருக்கு
அதற்கு மட்டும்
பதில்நீ கூறு
அதன்பின் மற்ற
கேள்வி களுக்கு
தன்போல் விடை
கிடைக்கும் பாரு
இதுவரை எத்தனை
கேள்விகள் கேட்டேன்
என்பது கூட
எனக்குத் தெரியாது
ஆனால் நீதந்த
பதில்கள் மட்டும்
விரல்விட்டு எண்ணிக்
கூறுவேன் பாரு
கழுவுற மீனில்
நழுவுற மீனாய்
பதில்தர மறுப்பது
ஏனெனக் கூறு
அதற்கு அவசியம்
உனக்கில்லை என்ற
எண்ணத்தை மட்டும்
நீயுமே மாற்று
படைத்த உனக்கு
பொறுப்பு இருக்கு
நானதைக் கூறத்
தேவையும் ஏது
அதையும் அடிக்கடி
நினைவு படுத்த
அவசியம் வந்ததை
எண்ணியேப் பாரு
விட்டுக் கொடுக்கும்
இயல்பெனக் கில்லை
என்பதை நீயும்
உணர்ந்ததினாலே
மீண்டும் ஒருமுறை
விட்டுக் கொடுத்து
முடித்து வைக்கும்
வழியினைத் தேடு
மத்திகிரி, 11-10-2020, இரவு, 10.45