Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1245

$
0
0

1245 Unknown secret

 

I came to this world

Only to live

I receive a heart

In order to become mean-minded

I learnt sin

In order to fall

I received your grace

In order to be redeemed

 

Though I uttered

In simplistic terms

The secret behind this

Is very great indeed

Several people

Tried to understand it

Who finally

Got the victory

 

I learnt the purpose about life

In this life

I learnt through my heart

About my mean-mindedness

Because of my fall

I understood the nature of sin

After redemption

I received you

 

But the aim

Is not clear

But I alone

Not reason for that

The goal of life

Is not very clear

Therefore I am

Not living properly

 

If I become mean-minded

Because of my heart

Then which one I can call

As my heart

Is there any means

For the heart

To be

Revived again

 

If I fell

Because of sin

Who kept this sin?

Within me

If I am not

Responsible for that

How I fell

Better you tell that to me

 

Though these kinds of

Questions were asked several times

No answer is

Very clear to me

The secret

Behind this

Is not

Disclosed to me

 

Therefore depending

Upon your grace

Knowing you in the peace

That it gives

Realizing that

I am saved; I am saved

I came to your feet

Taking refuge unto you

 

Mathigiri, 13-10-2020, 11.30 p.m.

 

Silent meditation though a blessing, it has its own problems.  Sometimes it is better to pray specifically for someone or some issues than sitting silently in the name of meditation. Because though it has its own bliss, several times it also raises so many issues and question about life for which I don’t have any convincing answer.  As I sat silently this night, the first thought that came to my mind is that though I came to the world to live, am I living properly?  As I began to contemplate on this as inspiration came I wrote this song as part of my meditation.

 

On the one side there is satisfaction and on the other side remain lots of question.  All the answers that theology gives is not convincing to the rational mind.  At the same time the grace of god gives the inner peace I live with the assurance that I am saved by him and in him.

 

1245 புரியாத ரகசியம்

 

வாழ்ந்திட வேண்டி

உலகினில் வந்தேன்

தாழ்ந்திட வேண்டி

மனத்தினைப் பெற்றேன்

வீழ்ந்திட வேண்டி

பாவத்தைக் கற்றேன்

உய்ந்திட வேண்டி

உன்னருள் பெற்றேன்

 

இத்தனை எளிதாய்

எழுதிய போதும்

இதன்பின் உள்ளது

மாபெரும் ரகசியம்

அறிந்திட வேண்டி

பலரும் முயன்றார்

இறுதி(யில்) வெற்றி

எவர்தான் அடைந்தார்

 

வந்தத்தின் நோக்கத்தை

வாழ்வினில் அறிந்தேன்

தாழ்ந்த நிலையை

மனதால் உணர்ந்தேன்

வீழ்ந்ததின் மூலம்

பாவத்தைப் புரிந்தேன்

உய்ந்ததின் பின்னால்

உன்னை அடைந்தேன்

 

ஆயினும் நோக்கம்

தெளிவாய் இல்லை

அதற்குக் காரணம்

நான்மட்டும் இல்லை

நோக்கம் எதுவெனப்

புரியவும் இல்லை

ஆகவே சரியாய்

வாழவும் இல்லை

 

மனதால் நானும்

தாழ்ந்தேன் என்றால்

மனம் என்று

எதனைச் சொல்வது

தாழ்மை அடைந்த

மனதும் மீண்டும்

உயர்ந்திட வழியுண்டா

என்பதைச் சொல்லு

 

பாவத்தினாலே

வீழ்ந்தேன் என்றால்

பாவத்தை எனக்குள்

வைத்தது யாரு

அதற்குப் பொறுப்பு

நானில்லை என்றால்

எப்படி வீழ்ந்தேன்

என்பதைக் கூறு

 

இதுபோல் கேள்விகள்

பலமுறை கேடும்

எவ்வித பதிலும்

சரியாய் இல்லை

இதன்பின் உள்ள

ரகசியம் மட்டும்

இன்னும் சரியாய்ப்

புலப்பட வில்லை

 

ஆகவே நீதந்த

அருளைச் சார்ந்து

அதுதரும் அமைதியில்

உன்னை அறிந்து

உய்ந்தேன் உய்ந்தேன்

என்பதை உணர்ந்து

உன்னடி வந்தேன்

சரணம் என்று

 

மத்திகிரி, 13-10-2020, இரவு, 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles