1246 My requirement
When I thought
What should I ask you?
I feel that
I should not ask anything from you
When the needs of
Body, soul and mind
Remain the same
For everyone
I have a
Separate need
And I want only
Ask that from you
I have a relationship
With you
That goes beyond
Body, soul and mind
When I come unto you
Seeking that relationship
Which even they
Do not understand
As You also
Join me
I should drown in that
Ocean of bliss
When I come out
From that ocean
That bliss should
Continue to remain
Though I continue
To live in this world
For the need of
Body, soul and mind
The special relationship
That I have with you
Should remain
All the time
You should
Overlord me
Transcending the limitation
Of mind, budhi and language
Then I should attain
That transcending status
Which I should
Never ask you again
Mathigiri, 16-10-2020, 11.00 p.m.
No experience remains permanently in our body, buddhi and even atman as long as we continue to live on this earth. Though we understood the assurance of mukti through buddhi, and experience it in our mind through reason (or theology) and when the atman lives with peace, still there is a status in bhakti which transcends all this. However a bhakta tries to experience it through physical or mental faculties, it goes beyond them all. And in our relationship with the Lord we get a glimpse of it. What I seek from the Lord is that status alone.
1246 தேவையானது
எதைக் கேட்பதென்று
எண்ணிடும் போது
ஏதுமே கேட்காமல்
இருந்திடத் தோணுது
உடல், மனம், உயிரின்
தேவைகள் அனைத்தும்
அனைவர்க்கும் பொதுவாய்
இருந்திடும் போது
தனியொருத் தேவை
எனக்குமே உள்ளது
அதைமட்டும் உன்னிடம்
கேட்டிடத் தோணுது
உடல், மனம், உயிரின்
உணர்வினைத் தாண்டி
ஒருவித உறவு
உன்னிடம் உள்ளது
அவைகளே உணறா
அந்த உறவினை
அடிக்கடி நாடி
வந்திடும் போது
என்னுடன் நீயும்
இணைந்திடும் அந்த
பேரின்ப நிலையில்
அமிழ்ந்திட வேண்டும்
மீண்டும் எழுந்து
வெளிவரும் போது
அந்தப் பரவசம்
தொடர்ந்திட வேண்டும்
உடல், மனம், உயிரின்
தேவைகக்காக
உலகில் தொடர்ந்து
வாழும் போதும்
தனித்து என்னிடம்
தேடியே வந்து
கொண்ட உறவு
நிலைத்திட்ட வேண்டும்
மனம், மொழி அறிவின்
வரையாரைக் கடந்து
முழுமையாய் நீஎன்னை
ஆட்கொள்ள வேண்டும்
அதன்பின் உன்னிடம்
அதைமீண்டும் கேட்காத
அநுபூதி அடைந்து
வாழ்ந்திட வேண்டும்
மத்திகிரி, 16-10-2020, 11.00