1275 Bring reconciliation
Though I have done
Many kind of practices
Though I made
Several attempts
My heart not yet
Within my control
Though I often complaint
About this to you
You do not have
Mercy upon me
And you never
Helped this poor
Beginning somewhere
Wandering in various places
My heart is
Tossing me in several ways
‘Why do you
Do like this’
If I question it
It questions me back
By asking:
‘When I am going
To get final
Freedom from you
God is there
To help you
But who is
There for me?
If you began to
Complaining then
He comes and
Sit next to you to listen all
“My sweet, my dear
My sweetest one”
By saying like this
He is comforting you
But so far my
Voice has not
Yet reached
His ears
I am lamenting
Sitting alone
I have to listen
Everyday your scoldings
There is none
To know my condition
You never allow me
To tell others about this
After giving all
These troubles to me
Why are you now asking
Questions back to me
You are not going
To understand my pains
As I am
Trapped within you”
After my heart has
Lamented like this
There is no point
In blaming it
When both me and
My heart
Struggle like this
Blaming each other
Unless you come
Voluntarily to
Bring reconciliation between us
There is no way for us
Therefore other than
This sadhana
I don’t know
Any other means
Therefore come and
Immediately help us
Otherwise continue to
Listen this kind of lamentations
Mathigiri, 26-07-2021, 11.00
Apart from external fights related to the body, I have two constant inner fights—one with God and another with my heart. In my fight with God, obviously He alone wins as He has His weapon ‘Divine Will’. Whereas in my fight with my heart there is no respite as we blame each other as the cause of this fight. Unless God interferes and brings reconciliation between us, though we will continue to fight at the end, God alone has to pay the price for that, as He has to listen to these kinds of songs.
1275 சமரசம் செய்வாய்
எத்தனையோ முறை
பயிற்சிகள் செய்தும்
எத்தனையோ வகை
முயற்சிகள் செய்தும்
என்மனம் என்வசம்
ஆகவே இல்லை
உன்னிடம் அடிக்கடி
நானித்தைச் சொல்லியும்
உன்மனம் இன்னும்
இரங்க்கிட வில்லை
ஏழை எனக்குநீ
உதவிட வில்லை
எங்கோ தொடங்கி
எங்கோ அலைந்து
என்மனம் பலவிதம்
அலைகழிக்கின்றது
இப்படியேன் நீ
செய்கிறாய் என்றால்
என்னையே மீண்டும்
கேள்விகள் கேட்குது
“உன்னிடமிருந்து
எனக்கொரு விடுதலை
எப்போ கிடைக்கும்”
என்னை கேட்குது
“உனக்கென உதவிட
இறைவனும் உள்ளான்
ஆனால் எனக்குத்தான்
எவர்தான் உள்ளார்?
குறைகளைச் சொன்னால்
உடனே வந்து
உன்னிடம் அமர்ந்து
அனைத்தையும் கேட்கிறான்
கண்னே கனியே’
என்கட்டிக் கரும்பே
என்றே சொல்லி
உன்னையும் தேற்றுறான்
ஆயினும் என்குரல்
அவனது செவிகளில்
ஏனோ இதுவரை
விழுந்திட வில்லை
தனியே இருந்து
புலம்புறேன் நானும்
உனது ஏச்சை
கேட்கிறேன் நாளும்
என்னிலை அறிந்திட
எவருமே இல்லை
பிறரிடம் சொல்லநீ
விடுவதும் இல்லை
இத்தனைக் கொடுமைகள்
எனக்கு செய்தபின்
என்னிடம் ஏன்நீ
கேள்வியும் கேட்கிறாய்
உன்னிடம் அகப்பட்டு
நான்படும் அவதியை
ஒருநாளும் நீயும்
உண்மையில் அறியாய்”
இப்படி என்மனம்
சொல்லிய பினால்
அதனை குறைசொல்லி
பயனுமே இல்லை
ஒருவரை ஒருவர்
குறைசொலிக் கொண்டு
நானும் மனதும்
போராடும் போது
நீயாக வந்து
சமரசம் செய்யாமல்
ஒப்புரவாக
வழியெமக் கில்லை
ஆகவே இந்தப்
பயிற்சியே அன்றி
வேறொன்றும் செய்ய
அறியவும் இல்லை
எனவே வந்து
உதவியும் செய்வாய்
இல்லையே இதுபோல்
புலம்பலைக் கேட்பாய்
மத்திகிரி, 26-07-2021, இரவு, 11.00
The post Bhakti Theology Song 1275 appeared first on Dayanand Bharati.