Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1293

$
0
0

1293 Give me patience

 

You alone know

The life that I am living

You alone will bestow

The liberation that I seek

 

Till that time

But Oh my Lord

You give me your grace

To have patience

 

The life on earth

Becomes a burden

My lamentation alone

Became praises now

 

But amidst this

The compassion

That you show

That alone becomes my life line

 

Let it happen as it happen

What else can I do?

When you are there to give company

What is there for me to fear?

 

But this is not

The call that you gave

I become frustrated thinking that

What else can I do now?

 

Praising you

Day and night

Proclaiming your glory

Till my tongue get scar

 

Thinking your divine grace

In my heart

I should live with you

Only seeking you

 

I longed only

This kind of life

I prayed you to

Bestow only this life

 

Whichever might be the life?

That comes in between

I know that that also

The responsibility you have given

 

I carry that responsibility

Accepting it

I will complete my duty

It you ask me to do

 

Gurukulam, 15-10-2021, 10.45 p.m.

 

These days I spend less time with the Lord.  When I sit for meditation, my mind refuses to concentrate on one thing but drags me with various challenges which I am facing at present. But amidst this, though I lament a lot, I experience His grace as he gives much patience to me to accept the reality and live with it.

 

1293 பொறுமை அருள்வாய்

 

நான்வாழும் வாழ்வை

நீமட்டும் அறிவாய்

நான்தேடும் விடுதலை

நீமட்டும் தருவாய்

 

ஆயினும் அதுவரை

பொறுமையாய் இருக்க

ஐயனே அனுதினம்

அருளையும் தருவாய்

 

புவியின் வாழ்வும்

பாரமாய்ப் போச்சு

புலம்பலே அனுதினம்

துதியாக ஆச்சு

 

ஆயினும் அதனிடை

நீ காட்டும் பரிவு

அதுஒன்றே எனது

உயிர்மூச் சாச்சு

 

நடப்பது நடக்கட்டும்

நானென்ன செய்ய

துணைநீ இருக்கையில்

பயமெனக் என்ன

 

ஆனால் இதுவல்ல

நீதந்த அழைப்பு

அதையெண்ணித் தவிக்கிறேன்

வேறென்ன செய்ய

 

நாளும் பொழுதும்

துதித்துமே பாடி

நா தழும்பேற

உன்புகழ் கூறி

 

உன்னருள் வாக்கினை

மனதிலே எண்ணி

உன்னுடன் வாழணும்

உன்னையே நன்னி

 

இந்த வாழ்வை

மட்டுமே நாடினேன்

அத்தைநீ தந்திட

அனுதினம் வேண்டினேன்

 

இடையில் வந்திடும்

வாழ்வெது ஆயினும்

அதுவும் நீதரும்

பொறுப்பென அறிவேன்

 

அந்தப் பொறுப்பைச்

சுமந்துமே கொண்டேன்

நீ சொல்லும்வரையில்

கடமையை முடிப்பேன்

 

குருகுலம், 15-10-2021, இரவு, 10.45

The post Bhakti Theology Song 1293 appeared first on Dayanand Bharati.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles