Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1294

$
0
0

1294 You are my refuge

 

Whether I weep or worship

What else can I do?

Where I will find refuge

Other than in you

 

If you give or refuse

What can I do?

Whatever you do

I will give my consent

 

Who is there?

Who understood my heart?

Who will listen to me?

When I share

 

When I struggle

Unable to communicate

Who else can understand me?

Other than you

 

Why you gave

This much trials

Oh my Lord

I cannot bear anymore pain

 

However you refine

And remove the rust

The iron will get rust again

This is my condition

 

But you have

The authority over me

You fulfil your will for me

I gave my consent

 

Though I told this

Very easily

I have some fear

Within me

 

But I know

Your motherly heart

That alone is my

Greatest weapon

 

If one hand strikes

Another will hug

And I found great joy

Only in this

 

So I will lament

To get it often

On the other side

I will take refuge in you

 

Gurukulam, 20-10-2021, 4.30 a.m.

 

God never sends trials more than what a bhakta can face. If one door is closed He will open many doors to escape from suffering and pain. But the greatest strength which bhakti gives is that whether I worship Him or sit and lament He is the final refuge for me.  So whether He sends trials or shows ways to escape finally it is His prerogative and for me to accept His will is my responsibility. But the carnal nature will often doubt and question the Lord.  However he refineed the iron by putting it on fire, still as it will get rust on it, this carnal nature will always drag us down. But the struggle between spirit and flesh is the reality in bhakti and the only solace is that everything works only for good for those who love the Lord.

 

1294 நீயே அடைக்கலம்

 

அழுதாலும் தொழுதாலும்

வேறென்ன செய்வேன்

அடைக்கலம் நீயன்றி

வேறெங்கு காண்பேன்

 

தந்தாலும் மறுத்தாலும்

நானென்ன செய்வேன்

எதைநீ செய்தாலும்

சம்மதம் என்பேன்

 

நீயன்றி யாருண்டு

என்மனம் புரிந்தோர்

நான்சொல்ல நீயன்றி

வேறெவர் கேட்பார்

 

சொல்லிடத் தெரியாது

தவித்துமே இருக்கையில்

என்னிலை நீயன்றி

வேறெவர் அறிவார்

 

எதற்காக நீதந்தாய்

இத்தனை சோதனை

ஐயனே தாங்கேனே

இனிமேலும் வேதனை

 

எத்தனை புடமிட்டுக்

களிம்பினை நீக்கினும்

இரும்பிலே துரும்பேறும்

இதுதான் என்னிலை

 

ஆயினும் உனக்குண்டு

என்மீது அதிகாரம்

நிறைவேற்று உன்சித்தம்

தந்தேனே சம்மதம்

 

இத்தனை எளிதாக

நான்சொன்ன போதும்

உள்ளாகப் பயமொன்று

உள்ளது என்னிடம்

 

ஆயினும் அறிவேனே

நீகொண்ட தாயுளம்

அதுதானே எனக்குள்ள

மாபெரும் ஆயுதம்

 

ஒருகரம் அடித்தாலும்

மறுகரம் அணைக்கும்

கண்டேனே இதனுளே

மாபெரும் ஆனந்தம்

 

அடிக்கடி அதைப்பெற

ஒருபுறம் அழுவேன்

மறுபுறம் உன்னிடம்

அடைக்கலம் புகுவேன்

 

குருகுலம், 20-10-2021, காலை 4.30

The post Bhakti Theology Song 1294 appeared first on Dayanand Bharati.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles